மமக பிரச்சாரம் தொடங்கியது !

உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து, அனலடிக்கிறது! திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தனித்து நிற்கின்றன. தே.முதிக, சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் ஓர் அணியாகவும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஒரு அணியாகவும் நிற்கின்றன. பா.ஜ.கவும் கொங்கு முன்னேற்றக்கழகமும் மற்றொரு அணியாக நிற்கின்றன.

இதுவரை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 9 முனைப்போட்டியில் கட்சிகள் களம் காண்கின்றன.

திமுகவும், அதிமுகவும் தங்கள் செல்வாக்கோடு பணத்தையும் கொட்டுவார்கள். அராஜகங்களை செய்வார்கள். மனிதநேய மக்கள் கட்சி இவர்கள் இருவரையும் எதிர்த்து வளர்ந்தத தாய் கழகமாம் தமுமுகவின் அரசியல் பிரிவு! தாய்பாலை பருகிய குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்! எனவே தமுமுகவின் குழந்தையான மமக அரசியல் வன்முறைகளை எதிர்த்து களமாடும்!

'வன்முறைக்கு பணியவும் மாட்டோம், துணியவும் மாட்டோம்' என சிராஜில் மில்லத் அப்துல் சமது சாஹிப் அவர்கள் கூறுவார்கள். அது ஒரு சரியான நிலைபாடு! எமக்கு அதிலே உடன்பாடு உண்டு!
வன்முறைக்கு செல்லமாட்டோம்! நம் மீது வன்முறை ஏவிவிடப்பட்டால் உரிய பதிலடியை கொடுக்காமல் திரும்பமாட்டோம்! என்பதை 2009 நாடாளுமன்ற மத்திய தேர்தலில் சென்னையில் நிரூபித்தோம்.

இப்போதும் ஆட்சிகள் மாறியிருக்கிறதே தவிர; காமராஜரின் வார்த்தைகளில் சொல்வதெனில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இப்போது புதிய ஆட்சியில்! எனவே குணாதிசயங்கள் ஒன்றுதான்!

களத்தில் உரிய வெற்றிகளை ஈட்ட உழைப்பும், துணிவும் தேவை. சமுதாய மக்கள் மிகுந்த வரவேற்பளித்துள்ளார்கள். பல இடங்களில் ஜமாத்துகளின் வேண்டுகோளை ஏற்று மமக வேட்பாளர்களை போடவில்லை. சில இடங்களில் ஜமாத்துகளின் வேண்டுகோளை ஏற்று நமது வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்துள்ளோம்.

இதனால் வாணியம்பாடி, காயல்பட்டினம், அதிராம்பட்டினம், போன்ற இடங்களில் சேர்மன் பதவிக்கு வேட்பாளர்களை போடுவதை தவிர்த்து வார்டுகளில் கவனம் செலுத்துகிறோம். கடையநல்லூர் போன்ற இடங்களில் ஒட்டுகள் பிரிந்து மூன்றாவது நபர்கள் வெற்றிபெறக்கூடாது என்பதற்காகவே தவிர்த்துவிட்டோம்.

கோவையில் ஐக்கிய ஜமாத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் அமீர் ஹம்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

முஸ்லீம் லீக் சார்பில் மதுரையில் மேயர் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

எங்கெல்லாம் சுமூக முடிவுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருகிறார்களோ அங்கேயெல்லாம் நமது களத்தை விட்டுக்கொடுத்து சமுதாய ஒற்றுமைக்கு துணை போயுள்ளோம். முத்துப்பேட்டையில் கூட ஐக்கிய ஜமாத் ஒரு முடிவெடுத்தால், அதை ஏற்றுக் கொள்கிறோம் என கூறினோம். பதில் இல்லை.

இன்று வேட்புமனு தாக்கல் கடைசி தேதி. இதில் தமிழகமெங்கும் போட்டியின்றி 12 மமக வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர்(அல்ஹம்துலில்லாஹ்)

இந்நிலையில் போதிய பண வசதி இல்லாமல் ஆங்காங்கே மமக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், அல்லாஹ் போதுமானவன், வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருக்கும் வசதி  மிக்கவர்கள் உங்களின் சொந்த ஊர்களில் போட்டியிடும் மமக வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

5.10.2011 முதல் நான் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு புறப்படுகிறேன். தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கரூர் மாவட்டங்களும் இதில் உள்ள திருச்சி மாநகராட்சி, கூத்தாநல்லூர் நகராட்சி, முத்துப்பேட்டை, பள்ளப்பட்டி, சோழபுரம் அதிராம்பட்டினம் பேரூராட்சிகளும் என்வசம் தலைமையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் தீவிர கவனம் செலுத்த உள்ளேன். எனவே அனைத்து சகோதரர்களும் எமது பணிகளுக்கும், வெற்றிகளுக்கும் துஃவா செய்யுங்கள்.

வெற்றிகளும், தோல்விகளும் இறைவன் தருபவை. உழைப்பது மட்டுமே நமது கடமை!

எனது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் :-
1. அக்டோபர் 5,6 -  கூத்தாநல்லூர்
2. அக்டோபர் 7    -  முத்துப்பேட்டை
3. அக்டோபர் 8    -  அதிராம்பட்டினம்
4. அக்டோபர் 9    -  லால்பேட்டை
5. அக்டோபர் 10  -  கள்ளக்குறிச்சி
6. அக்டோபர் 11  -  திருச்சி
7. அக்டோபர் 12  -  பள்ளப்பட்டி
அக்டோபர் 13, 14, 15, 16, 17 தேதிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெறும். 

தமிமுன் அன்சாரி 

Related

TMMK 152047214366634090

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item