மயிலாடுதுறை தொகுதியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் ஓட்டு சேகரித்தார்
http://koothanallurmuslims.blogspot.com/2009/04/blog-post_9422.html
சங்கரன்பந்தலில் பேரா.ஜவாஹிருல்லாஹ் ஓட்டு சேகரித்தார்
நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளரான முனைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் சங்கரன்பந்தல் பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வடகரை ஜமாத் சந்திப்பு
சமுதாயத்தின் கண்ணியத்தை கட்டிக்காக்கும் வகையில் துவக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே எந்தவொரு பெரிய கட்சியின் துணையும் இல்லாமல் மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பில் மணிசங்கர ஐயரும், அ.தி.மு.க. சார்பில் ஓ.எஸ்.மணியனும் போட்டியிடுகின்றனர்.மயிலாடுதுறை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நீடூர்
கடந்த 2004 தேர்தலின் போது இவர்கள் இருவருக்குமான நேரடி போட்டியில் தமுமுகவின் தீவிர பிரச்சாரம் மற்றும் களப்பணியின் காரணமாக மணிசங்கர ஐயர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் அடிப்படையில் பேரா.ஜவாஹிருல்லாஹ் வெல்வது உறுதியாகி விட்டது.