இந்துக்களின் 11 அம்ச கொள்கை: நிறைவேற்றுபவர்களுக்கு ஓட்டு-விஎச்பி

சென்னை: தேர்தலில் இந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாகும் வகையில் தர்ம ரக்ச மஞ்ச் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன் 11 கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்புகளுக்கு ஓட்டளிப்போம் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்அவர் கூறுகையில்,தர்ம ரக்ச மஞ்ச் அமைப்பின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 28, 29 ஆகிய இரு நாட்கள் மும்பையில் நடந்தது. அதில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், சுவாமி தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்களை தவிர்த்து ஊரன் அடிகள், சுவாமி கமலாத்மானந்தர், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகள், திருமலைக்கோடி ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா ஆகியோரும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவில் 85 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். ஆனாலும் இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியாவில் போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களின் உணர்ச்சிகள் மதிக்கப்படுவதில்லை. அதிகளவில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துவிட்டது.
இந்து கோயில்களுக்கு தனி வாரியம், மதமாற்ற தடை சட்டம், இந்தியாவை ஆன்மீக நாடாக அறிவித்தல், ராமர் பாலத்தை புனித மரபு சின்னமாக அறிவித்தல், பொது சிவில் சட்டம் மற்றும் ராமர் கோவில் கட்ட அனுமதி உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதை நிறைவேற்றுபவர்களுக்கு இந்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தர்ம ரக்ச மஞ்ச் கேட்டு கொண்டுள்ளது.சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக வருண் காந்தி அரசியலில் ஈடுபட்டு வருவதை விரும்பாத சக்திகள் அவருக்கு எதிராக சதி செய்து வருகின்றன. அதனால்தான் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.நாடு முழுவதும் இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுக்கூட்டம் நடத்தப்படும். தர்ம ரக்சா மஞ்ச் தமிழகத்தில் 31 ஊர்களில் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் 31 மடாதிபதிகளும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். தமிழகத்தில் தர்ம ரக்சா மஞ்சின் முதல் கூட்டம் ஏப்ரலில் நடக்கும் என்றார் வேதாந்தம்.

Related

VHP 6131203085873591056

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item