4வது அணித்தலைவர்களை சந்தித்தார் டாக்டர் ராமதாஸ்!

4வது அணித்தலைவர்களை சந்தித்தார் டாக்டர் ராமதாஸ்!


மனித நேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் சரத் குமார், டாக்டர் கிருஷ்ண சாமி, கிரிஸ்துவ அமைப்புகள் இன்னும் 50கும் மேற் பட்ட சமூக அமைப்புகளும் சாதி சங்கங்களும் இணைந்து பலத்தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருப்பதாக தின மலர் உள்பட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றது!


இவைகள் அனைத்தும் தி மு க மற்றும் அ தி மு க விற்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் என சொல்கிறது..


சில தனியார் நிருவனங்கள் எடுத்த கருத்து கணிப்புகளும் இதைத்தான் உறுதி செய்வதாக மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி ஒருவர் அதிரைPOST டிடம் தெரிவித்தார்!



பாட்டாளி மக்கள் கட்சிக்காக டாக்டர் அன்பு மணி ராமதாஸ் அவர்கள் முயற்சியில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பும் 4வது அணிக்கு பெரும் ஆதரவு உள்ளதை உறுதி செய்து கொண்டனர் என கூறப்படுகிறது !


இந்த நிலையில்தான் இன்று 13/04/09 மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாட்டாளி மக்கள் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் கோ.க.மணி அவர்களும் சென்று மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் எ.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,எஸ்.ஹைதர் அலீ உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து நீண்ட நேரம் தனியாக பேசினர்!
கூட்டணியைத்தாண்டிய இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!

ஏன் திடீர் சந்திப்பு....? ம ம க நிர்வாகி ஒருவரிடம் கோட்டோம்!


"பொருத்திருந்துப்பாருங்கள்"
ஒற்றை வரியில் பதிலை முடித்துக்கொண்டார்!

அதிரை போஸ்டிற்காக...

ம ம க தலைமை அலுவலத்திலிருந்து....

-அபாபீல்-

நன்றி: அதிரைPOST

Related

TMMK 3963321497965918918

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item