மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் பிரச்சாரப் படங்கள்
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்களை, புதிய தமிழகம் கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துறைமுகம் புதிய தமிழகம் தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். பின்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது ஆகியோர் உடனிருந்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் திரு. செ. ஹைதர் அலி அவர்கள் கோடம்பாக்கம் பிராமணர்கள் நலச்சங்க தலைவர் ராமமூர்த்தி அவர்களையும், ரப்பானி வைத்தியசாலை நிறுவனர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும், ஆசாத் நகர், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. பகுதி ஜமாத் தலைவர்கள், வில்லிவாக்கம் இயேசு கிறிஸ்து தேவாலயங்கள், அருட்தந்தைகள் ஆகியோரையும், மேலும் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர், தான் சாமானிய சமூகத்தில் இருந்து வந்த களப் போராளி என்றும், மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இருந்து போராடுவேன் என்றும், தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து சேவை செய்வேன் என்றும் கூறி வாக்குகள் சேகரித்தார். அவருடன் ம.ம.க.வின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்களும், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், வில்லிவாக்கம் வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் திரு. செல்வராஜ், மனித உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் திரு. செ. ரமேஷ்பாபு, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் திரு. மோகன் சுந்தரம், அம்மன்கோட்டை நலச்சங்கம் தலைவர் திரு. பிரபாகரன் ஆகியோரையும் ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்.
WELL DONE
ReplyDelete