எண்டோஸல்ஃபான் தடை செய்யக்கோரி SDPI டெல்லியில் தர்ணா


எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.

எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர்.

74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது. எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வரவேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களின் உயிர்களைவிட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.

இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

SDPI - DELHI

Related

SDPI 8339592113264795556

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item