துறைமுகம் தொகுதியில் SDPI மற்றும் தி.மு.கவினரிடையே மோதல்
http://koothanallurmuslims.blogspot.com/2011/04/sdpi_15.html
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்ற 13ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவது நடைபெற்றது. ஒரு சில இடங்களில் தவிற மற்ற அனைத்து இடங்களிலும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நமது துறைமுகம் தொகுதியில் கொண்டித்தோப்பு, சிவனங்கன் பூங்கா அருகில் ராமகிருஷ்ணா பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஆளூம் தி.மு.கவினர் கள்ள ஓட்டுப்போடுவதாக தகவல் கிடைத்ததும் எஸ்.டி.பி.ஐன் உறுப்பினர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக கொண்டித்தோப்பிற்கு விரைந்து சென்றனர்.
வாக்குச்சாவடி அருகே தி.மு.கவை சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட குண்டர்கள் பதட்டத்தை ஏற்படுத்தியவாறு பிரச்சனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அங்கே சென்ற எஸ்.டி.பி.ஐனரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரச்சனை வேண்டாம் என்ன சூழ்நிலை என்பதை அறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் வேண்டுமென்றே பிரச்சனையை கிழப்பி எஸ்.டி.பி.ஐயின் உறுப்பினர்களை கண்மூடித்தனமாக தாக்கத்தொடங்கினர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத எஸ்.டி.பி.ஐன் உறுப்பினர்கள் தற்காப்பிற்காக திருப்பித்தாக்கியதில் தி.மு.கவை சேர்ந்த 4 நபர்கள் படுகாயமுற்றனர். ஆனால் காவல்துறையினர் ஆளும் கட்சி என்பதால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எஸ்.டி.பி.ஐன் 2 உறுப்பினர்களை கைது செய்துள்ளது மேலும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தி: முத்து
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் 14.04.2011 அன்று வெளிவந்த செய்தி |
செய்தி: முத்து