காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்?

காலில்லாத ஒருவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஆர்.எஸ்.எஸ் முன்பு நடத்திய தாக்குதலில் ஒரு கால் நஷ்டமானது. இந்நிலையில் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மஃதனி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்  மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் மேற்கண்ட விமர்சனத்தை வெளியிட்டது.

ஜாமீன் மனுவில் ஒருவாரத்திற்குள் சத்திய வாக்குப் பிரமாணம் அளிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும்.

அப்துல் நாஸர் மஃதனிக்காக பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். கர்நாடக அரசுக்காக எவரும் ஆஜராகவில்லை. தனக்கெதிரான வழக்கு அரசியல் தூண்டுதலாகும். தனது உடல் நலன் மோசமாகியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரி அப்துல் நாஸர் மஃதனி உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்டவர்தாம் அப்துல் நாஸர் மஃதனி என சாந்திபூஷன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். கர்நாடகா அரசுக்கு ஏதேனும் கூறவேண்டுமெனில் அதனை கேட்டபிறகே தீர்மானம் எடுக்கவியலும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

பார்வை இழந்துவிடுவது உள்பட ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை அப்துல் நாஸர் மஃதனி சந்திக்கிறார். 24 மணிநேரமும் சிறையில் விளக்கை எரியவிடுவது அவருடைய கண் பார்வையை பாதிக்கிறது. அவருக்கு சிறையில் சிகிட்சை அளிக்கவேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை சிறை அதிகாரிகள் மதிப்பதில்லை. சிறையில் மஃதனிக்கு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு விளக்கம் கோரி மனித உரிமை கமிஷன் அனுப்பிய நோட்டீஸுக்கு கர்நாடகா அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என ஜாமீன் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கறிஞரான அடால்ஃப் மாத்யூவும் அப்துல் நாஸர் மஃதனிக்காக ஆஜரானார்.

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தது.

Related

supreme court 8884744236912415148

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item