SDPI தமிழ் மாநில தலைவரின் பதில்கள்
http://koothanallurmuslims.blogspot.com/2011/04/sdpi_10.html
SDPI தமிழ் மாநில தலைவர், இமாம் KKSM .தெஹ்லான் பாகவி அவர்கள் வாசகர் பெருமக்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் அனுபயுள்ளர்கள், அந்த பதிலை இங்கே வெளியிடுகின்றோம்.
1. எத்தனை இயக்கம், எத்தனை கொள்கை, அதை உங்களால் தெளிவாக பட்டியலிட முடியுமா? நான் நினைக்கிறன் ஒவ்வொரு இயக்கம் உருவாக்கத்தின் பின்னால் உள் அரசியல், மற்றும் இகோ தான் உள்ளது என்று? சரியா? நான் அரபு நாட்டில் வேலை பார்கிறேன், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உங்கள் இயக்கம் செய்தது என்ன?
Syed Ibrahim, Trichyஒரு சமுதாயத்தில் பல இயக்கங்களும், குழுக்களும் உருவாவது இயற்கையானது, ஒரு சமுதாயத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போது இது மேலும் தவிர்க்க முடியாதது, சில இயக்கங்கள் உருவாவதற்கு "ஈகோ", உள் அரசியல் காரணமாக இருந்திருக்கலாம், எல்லா இயக்கங்களும் உருவானதற்கு அது தான் காரணம் என்று சொல்ல முடியாது.
SDPI பொறுத்தவரை "அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க கூடிய ஓர் அரசியல் சக்தி இல்லை" என்கிற ஓர் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பும் பொருட்டே SDPI தேசிய அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது.
SDPI தொடங்கி 18 மாதங்களே ஆகிறது. அதன் ஆதரவாளர்கள் வெளி நாடுகளிலும் உள்ளார்கள். அமைப்பு ரீதியாக SDPI வெளி நாடுகளில் கட்டமைக்க படவில்லை.
2. நீங்கள் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை இருகிறதா?
M.Riyasudeen. Kovai.
SDPI தமிழகத்தில் தனக்கு நன்கு கட்டமைப்புகள் உள்ள 7 தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிகளில் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை முஸ்லிம் ஓட்டுகளும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தலித்களின் ஓட்டுகளும் உள்ளன. மும்முனை போட்டி என்கின்ற நிலையில் வெற்றி பெறுவதற்கு 35 ஆயிரம் ஓட்டுகள் போதுமானது என்கிற நிலையில் முஸ்லிம்களின் ஒட்டு SDPI-க்கு ஒருமுகமாகவோ பெரும்பான்மையாகவோ கிடைத்து வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. இல்லை எனினும் கண்ணியமான ஓட்டுகளை SDPI-ஆல் பெற முடியும்.
இது எதிர்காலத்தில் SDPI-ன் சமுதாயம் சார்ந்த கோரிக்கைகள் அங்கீகரிக்கபடுவதற்கும் எதிர்காலத்தில் தேர்தல்களில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
3. முஸ்லிம்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதை கலந்து ஆலோசித்து தவிர்க்கலாம் இல்லையா?
Mohamed. Labbai Kudikaadu.முஸ்லிம் வேட்பாளர்களை சில தொகுதிகளில் எதிர்த்து போட்டியிடுவது என்பது அரசியல் கட்சி என்கிற நிலையில் தவிர்க்க முடியாது. முடிந்த அளவு அதை தவிர்த்திட வேண்டும் என்பதற்க்காகவே எல்லா கட்சிகளும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவிக்கும் முன்பே SDPI அறிவித்தது. தி.மு.க, அ.தி.மு.க, போன்ற கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களால் சமுதாயத்திற்கோ அல்லது தொகுதிக்கோ எந்த நன்மையும் கிடைபதில்லை. கடந்த முறை பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்த T.P.M. மைதீன் கான் தொகுதிக்கும் எதுவும் செய்யவில்லை சமுதயாதிற்க்கும் எதுவும் செய்ய வில்லை. மேலும் பாளையங்கோட்டை மக்கள் கொதித்து போய் உள்ளனர். இப்படிப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று என்ன பயன்.
சமுதாயத்திற்காக அர்பணிப்பு உணர்வுள்ளவர் வெற்றி பெற்று சட்டஅவைகளில் சமுதாயத்தின் குரலை எதிரொலிக்க வேண்டும். அந்த வகையில் போராட்ட அரசியலை லட்சியமாக கொண்ட SDPI தேசிய அளவில் வளர்ச்சி பெறுவதே அந்நிலையை உருவாக்கும்.
4. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் தெஹ்லான். முதலில் உங்களுடைய முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக. தமிழகத்தில் முஸ்லிம்கள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அறுபது தொகுதிகள் என சில அரசியல் கட்சிகள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொது ஏன் SDPI அறுபது தொகுதிகளில் போட்டி இடாமல் பத்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறீர்கள். அறுபது தொகுதிகளிலும் SDPI போட்டியிடுமானால் நம்முடைய சமுதாயத்தின் வோட்டு வங்கியை நிருபிக்க நல்ல வாய்ப்பாக இருக்குமே. எனேற்றால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக பரவியுள்ள கட்சி நீங்கள். மேலும் தமிழக்கத்தின் களப்பணி ஆற்றக் கூடிய சிறந்த தொண்டர்களை கொண்டுள்ள கட்சி நீங்கள். நீங்கள் இந்த முயற்சியினை எடுப்பிர்கலாயின் அது நிச்சயம் முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும்.
Sheik Abdul Kadir. Saudi Arabia
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி, துவங்கி 18 மாதமே ஆன நிலையில் இத்தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளோம் வரும் தேர்தல்களில் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு வங்கியை ஒருமுகப்படுத்தும் முயற்சியை SDPI மேற்கொள்ளும்.
5. முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி என SDPI கட்சியை அறிமுகப்படுத்துகின்றீர்கள். இந்நிலையில், ஒரு காலத்தில் வேறு சமுதாய மக்கள் SDPI -ல் அதிகமாகி முஸ்லிம்கள் தலைமை பதவியை இழக்க நேரிடுமா? அப்பொழுது நாம் பாடுபட்டதெல்லாம் வீணாகி விடாதா? அல்லது முஸ்லிம்கள் தொடர்ந்து தலைவர்களாக நீடிக்க ஏதேனும் சட்டதிட்டம் வகுத்துள்ளீர்களா?
Sheik. Dubai
உங்களின் கவலையையும் கவனத்தில் கொண்டே SDPI-ன் சட்ட திட்டங்களும் கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கினைந்து பயணிக்கும் வகையில் SDPI-ன் பயணம் இறையருளால் அமையும்.
6. SDPI கர்நாடகா மாநில கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி மற்றும் கிறிஸ்தவ விழா ஆகியவற்றை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டதைக்குறித்து விமர்சிக்கின்றார்களே! இது தவறில்லையா? பொதுவான கருத்தோட்டத்தில் பயணிக்கும் கட்சி என்றால் அதன் உறுப்பினர்கள் வேண்டுமானால் எம்மதத்தையும் பின்பற்றுவராக இருக்கலாம். ஆனால், கட்சியை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாதல்லவா?
Sheik. Dubai
SDPI-ல் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களின் சொந்த மதத்தை வழிபடுவதும், அவர்களின் திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்வதிலும் முழு உரிமை உண்டு. அதை கட்சி நிகழ்ச்சியாக மாற்றும் போது தான் தாங்கள் எழுப்பிய சந்தேகம் வரும். கட்சியில் உள்ள முஸ்லிம்கள் பெருநாள் வாழ்த்து சொல்வார்கள். பிற சமுதாய நிர்வாகிகள் அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார்கள். இது ஒருபோதும் அவரவர் சொந்த மதத்தை விட்டுகொடுபதாகாது.
7. எனக்கு கடையநல்லூர் இன்னும் நமது வேட்டபாளர் மக்கள் மத்தியில் கொண்டுபோகவில்லை என்று நான் நினைகின்றேன், நான் என் என் மனைவியிடம் நமது வேட்ப்பாளர் முபாரக் ஒட்டு போடவேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர் யார் என்று கேட்டுகின்றார், அதனால் உங்கள் சகோதரர்களிடம் சொல்லவும் மக்கள் மத்தியில் இன்னும் கொண்டுபோகவேண்டும். இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் நாம் அதிகமான ஓட்டுகளை வாங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் நான் துவசெய்கின்றேன்.
Saleem. Kadayanallur.
தங்களது ஆலோசனைக்கு நன்றி. கடையநல்லூர் தொகுதியில் தற்போது வேகமாக தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. உங்கள் முயற்சியும் துஆக்களும் தொடரட்டும்.
8. நீங்கள் ஏன் அதரவு கேட்டு TNTJ ஆபீசுக்கு போகவில்லை?
Anees. USA, California.
நாம் எந்த இயக்கத்தையும் தீண்ட தகாதவர்களாக நினைப்பதில்லை. தற்போது TNTJ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் அவசியமும் ஏற்படவில்லை. சில தொகுதிகளில் நமது வேட்பாளர்கள் ஆதரவு கேட்டு சென்றுள்ளனர்.
9. ராமநாதபுரத்தில் நீங்கள் MMK வை ஆதரித்தால் உங்களுக்கு என்ன குறை?
Sulaimaan, Earvadi.
கூட்டணி அமைப்பதற்கு முன்பே ஒருங்கிணைந்து தேர்தலில் செயல்படுவது பற்றி ஆலோசிகாததும். ம.ம.க-வின் தொகுதிகள் அறிவிக்கப்படும் முன்பே SDPI அத்தொகுதியில் போட்டியிடுகிறது என்று அறிவித்திருந்தும் வேறு தொகுதியை வாங்க முயற்சிகாதத்தையும் தவிர்த்து ராமநாதபுரத்தில் MMK-வை ஆதரிக்காததற்கு எந்த காரணுமுமில்லை.
10. நம் முஸ்லிம் சமுதாயம் 10-க்கு மேற்பட்ட கூட்டமாக பிரிந்து கிடக்கின்றோம், நாம் எப்போது ஒரே அமீருக்கு கீழ் வேலை செய்ய போகிறோம்?
Mohamed Yousuf, Nagore.
பல பிரிவுகளாக பிரிந்து நிற்பது, பல இயக்கங்களாக செயல்படுவது எல்லா சமுதாயத்திலும் உள்ள நிலைதான். நாம் எதிர்பார்க்க வேண்டியது பல இயக்கங்களாக செயல்பட்டாலும் பொது விசயத்தில் ஒன்று சேர்ந்து செயல்படுவது பற்றி தான். அந்நிலை வருவதற்காக முயற்சிப்போம் பிரார்த்திப்போம்.
11. அதிகபட்சமாக ஒன்றுபட வாய்ப்புள்ள சமுதாயம் நம்முடையது ஆனால் இதில்தான் அதிகமாக 47 இயக்கங்கள்/கட்சிகள் உள்ளன. இவற்றை ஒன்றிணைக்க அல்லது ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த முயற்சித்துள்ளீர்களா?
Sheik Alavudeen, Kadathoor.
தாங்கள் சொல்வது போன்று 47 இயக்கங்கள் இருப்பினும் தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு உள்ளது சில இயக்கங்களுக்கு மட்டும் தான். பல இயக்கங்களில் சில தலைவர்கள் மாத்திரமே உள்ளனர். தமிழகத்தில் இயக்கங்களின் கூட்டமைப்பும் செயல்படுகிறது. பொது பிரச்சனைகாக நாமும் அனைத்து இயக்கங்களையும் ஒன்று கூட்டி செயல்படுகிறோம்.
12. ஆர்.எஸ்.எஸ்.யை தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க ஏதும் வழக்க தொடுத்துள்ளீர்களா?
Sheik Alavudeen, Kadathoor.
RSS இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதால் அதன் செயல் பாடுகளையும் வளர்ச்சியையும் தடுக்கமுடியாது. ஏற்கனவே இருமுறை தடை செய்யப்பட்டுள்ளது தான் RSS. எனவே RSS-ஐ மக்களிடம் தனிமை படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். RSS-ன் சதிகளை கிழித்தெறியும் போராட்டத்தில் அனைவரும் களமிறங்க வேண்டும்.
13. ஒரு வெகுஜன தொடர்புக்கு ஏதாவது திட்டம் உங்களிடம் உண்டா? இன்று SDPI என்றால் ஏதோ பயங்கரவாத இயக்கம் என்ற மாயை உள்ளதே அதை உடைக்க ஏதும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
Sheik Alavudeen, Kadathoor.
SDPI ஒரு சமுதாய இயக்கமல்ல, இது ஓர் அரசியல் கட்சி. இது ஓர் வெகுஜன இயக்கமே. நீங்கள் சொல்வது போல் சிலர் ஏற்படுத்த முயற்சிக்கும் மாயையை இறை அருளால் உடைத்தெறிவோம்.
14. முக்கியமாக தமிழக முஸ்லீம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன?
Sheik Alavudeen, Kadathoor.
SDPI பொது கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பிரச்சாரங்கள், தனிநபர் சந்திப்பு, போராட்டங்கள் இப்படி பல்வேறு செயல்பாடுகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது அது தொடரும்.
15. தேர்தலில் SDPI நிலைப்பாடு என்ன? SDPI -க்கு என்ன சின்னம் ஒடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்வீர்கள். ஏனென்றால் DMK மற்றும் ADMK பல பொய்யான வாக்குறுதிகளை கொடுகிறார்கள்.?
Nanaketkavillai. Madras.
SDPI-ன் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 5% ஆக உயர்த்தபடவும், வக்பு வாரிய சொத்துகள் முறைபடுதபடவும், முஸ்லிம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வட்டி இல்லா கடனுதவி வழங்கபடவும். தீண்டாமை முற்றிலும் ஒழிக்கபடவும், பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவும் குரல் கொடுப்பார்கள். அந்தந்த தொகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவும் அதற்காக போராடுவார்கள். அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்துவார்கள்.
16. உங்களுடைய குறுகிய மற்றும் நீண்ட கால திட்டம் என்ன ? TMMK, MMK, முஸ்லிம் லீக், TNTJ, INTJ போன்ற இஸ்லாமிய அமைப்புகளையும், தலித் கட்சிகளையும் ஒன்றிணைத்து 2016 தேர்தலில் போட்டி இட்டால், நாம் 60-க்கு மேற்பட்ட தொகுதியை பெறலாம் அல்லவா? அப்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், கொள்கை பிரச்சனையை தவிர்க்கலாம். முஸ்லிம்களுடைய பணத்தை ( கல்வி, மருத்துவம், தொழில் போன்று ) சரியாக பயன்படுத்தலாம். நான் என்னுகிறேன் நீங்கள் தான் சரியான நபர் என்று. தாங்களுக்கு தான் தேசிய அளவில் அனுபவம் உள்ளது.
Thamim, Chennai.
SDPI-ன் குறுகிய மற்றும் நீண்டகால திட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவத்தை பெறுவது. இதன் மூலம் சமுதாயம் அனைத்து துறைகளிலும் முன்னேறியே சமுதாயமாக மாறும் வாய்ப்பு ஏற்படும். இதை நோக்கியே SDPI-ன் செயல் திட்டங்களும் பயணங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
17. உங்கள் கட்சியின் உண்மையான கொள்கை என்ன?
Raseed. Thiruvithamcode.
SDPI-க்கு உண்மையான கொள்கைகள் மாத்திரம் தான் வரையருக்கபட்டுள்ளது. அது
- ஒடுக்கப்பட்ட சமூகங்களான முஸ்லிம்கள், தலித்கள், பழங்குடியின மக்களை தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பது.
- சமுதாய மற்றும் அரசியலை சீர்படுத்துவது.
- ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராடுவது.
- ஒவ்வொரு சமூகத்திலும் அதன் மக்கள் தொகைகேற்ப அதிகார அவைகளில் பிரதிநிதிதுவதை ஏற்படுதுத்வது.
- வட்டியில்லா பொருளாதாரக் கொள்கையை நடைமுறைபடுத்துவது.
- இந்தியாவின் அடிப்படை தத்துவங்களான ஜனநாயகம், மதசார்பின்மை இவற்றை பாதுகாப்பது போன்றவை கொள்கைகளாகவும் "பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை" என்பது இதன் முழக்கமாகவும் வரையருக்கப்படுள்ளது.
18. SDPI போட்டி இடாத இடங்களில் உங்களின் நிலைப்பாடு என்ன?
Abdul Razak. Chennai.
SDPI போட்டியிடாத தொகுதிகளில் சேப்பாக்கம், ஆம்பூர் தொகுதிகளில் ம.ம.க-விற்கும் அறந்தாங்கியில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் K.M. ஷரிப் அவர்களுக்கும் ஆதரவை அளிப்பதோடு எஞ்சிய 223 தொகுதிகளில் தி.மு.க கூட்டனியை ஆதரிக்கிறோம்.
முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு அளித்தது, அருந்ததியினர் சமுகத்திற்கு இடஒதுக்கீடு அளித்தது, உலமா நலவாரியம் அமைத்தது, மீண்டும் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பது இவற்றை மனதில் கொண்டு இம்முடிவு எடுக்கபட்டிருகிறது.
19. அஸ்ஸலமு அழைக்கும், இறைவன் உதவியால் இந்த ஒரு அழகிய வாய்ப்பை கொடுத்த முத்துப் பேட்டை.org எனது நன்றி. மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் நின்று முஸ்லிம்களின் வாக்கு சிதறும் வாய்ப்பு உள்ளது இதனால் மூன்றாம் நபர் வரக்கூடும் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த தொகுதியை இவர்களுக்கு வீட்டுக்கோடுத்தல் உங்களின் செவ்வாக்கும் அதிகரிக்கும் இறைவன் உதவியால் மற்ற தொகுதியில் இந்த அமைப்பை சேர்த்த சகோதரர்கள் உங்களுக்காக வாக்கு சேகரிப்பார்கள் அல்லவா. Mohamed Ershath. Muthupettai.
ராமநாதபுரம் தொகுதியில் SDPI-ன் வேட்பாளர் முன் கூடியே அறிவிக்கப்படிருந்தார் என்பதும் அவரை எதிர்த்துதான் ம.ம.க. வேட்பாளர் நிருத்தபட்டிருகிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ராமநாதபுரத்தில் யார் ஜெயித்தாலும் ஒரு முஸ்லிம் ஜெயிபதற்கே வாய்ப்பு உள்ளது. துறைமுகம் தொகுதி வேட்பாளரை பிற கட்சிகள் அறிவிக்கும் முன்பே ராமநாதபுரம் வேட்பாளரை போன்றே துறைமுகத்திலும் SDPI வேட்பாளரை நிறுத்தி தேர்தல் களப்பணியையும் துவங்கிவிட்டது.
கலைஞர்-க்கு ஜால்ரா தட்டுவதை தவிர வேறு எந்த சமுதாயப் பணியையும் செய்யாதவர் கொல்லைபுரம் வழியாக வேட்பாளராக நிருதப்பட்டிருகிறார். இவ்விஷயத்தில் கலைஞர்-க்கு பாடம் புகட்ட வேண்டிய கடமை சமுதாயதிற்கு இருபதாகவே கருதுகிறேன்.
இந்த இரு தொகுதியில் நாம் விட்டு கொடுத்தாலும் இருகட்சிகளும் SDPI-க்காக வேலை செய்யமாட்டார்கள் வேலை செய்யவும் முடியாது.
20. இராமநாதபுரத்தில் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது கவலை அளிக்கிறதே?
Rahmathullah. Ervadi, Ramanathapuram.
போட்டியிடுவது 4 முஸ்லிம் வேட்பாளர்கள். இவர்களில் ஒருவரே வெற்றி பெறுவார்.
21. அஸ்ஸலாமு அழைக்கும் பாகவி இமாம், அரசியல் முழுக்க முழுக்க ஹராம். இது இஸ்லாத்திற்கு எதிரானது, அப்படி இருக்கையில் நீங்கள் இதை ஏன் தேர்வு செய்தீர்கள், குரான் ஆதாரம் காட்ட முடியுமா?
Riyas, Coimbatore.
அரசியல் முழுக்க முழுக்க ஹராம் என்பதும், இது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதும் தவறான கருத்து. இக்கருத்தை முன்வைக்கும் தாங்களே அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.
22. தங்களுடைய கட்சியின் வருங்கால திட்டம் பற்றி? தமிழகத்தில் உள்ள ஏனைய சகோதர அமைப்புகளுடன் வருங்காலத்தில் இணைந்து தேர்தல் பணியாற்றுவீர்களா?
Mohamed Barakathullah, Singapore.
SDPI-ன் திட்டங்கள் பற்றியும் கொள்கை பற்றியும் ஏற்கனவே குறிபிட்டுள்ளேன். இதை நிறைவேற்ற அனைத்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற SDPI தயாராக உள்ளது.
23. SDPI, MMK, TNTJ, INTJ இந்த அமைப்புகளின் வித்தியாசம் என்ன?
Ameer, Thiruvithancode.
SDPI - MMK இவை இரண்டும் அரசியல் கட்சிகள். SDPI முஸ்லிம்கள் உட்பட ஒடுக்கப்பட்ட சமூகங்களான எல்லா சமுதாய மக்களும் இணைந்து பணியாற்றும் தேசிய அரசியல் கட்சி.
TNTJ - INTJ இவை இரண்டும் சமுதாய அமைப்புகள்.
24. பன்முக சமூகங்கள் வாழும் இந்திய தேசத்தில் அரசியல்,சமூக தளங்களில் முஸ்லிம்கள், தங்களது தனித்தன்மையை விட்டு தர நேர்கிறதா..? இந்திய முஸ்லிம்களை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷயமாக எதைக் கருதுகிறீர்கள்? மற்ற முஸ்லிம் அமைப்புகளிலிருந்து எந்த வகையில் உங்கள் அமைப்பு வேறுபடுகிறது? கருத்து வேறுபட்ட விஷயங்களைத் தவிர்த்து, கருத்தொற்றுமையான விஷயங்களில் பிற சகோதர முஸ்லிம் இயக்கங்களோடு இணைந்து செயல்பட்ட அனுபவம் உள்ளதா..?
Firoz Khan, France.
முஸ்லிம்களை அச்சுறுத்தும் பெரிய விசயமாக ஹிந்துத்துவ பாசிசத்தையே பார்கிறேன். ஹிந்துத்துவ பாசிசம் தனியாக செல்லும் ஆட்டை சுலபமாக அடித்து விடலாம் என்ற சூத்திரத்தின் அடிபடையில் அரசியல் மற்றும் சமுக தளங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்த முயற்சிகிறது. இடைபற்றி எச்சரிக்கை முஸ்லிம்களிடம் அதிகம் இருக்க வேண்டும்.
கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமுள்ள தேசிய அரசியல் கட்சி என்றவகையில் மற்ற அமைப்புகளிடம் இருந்து SDPI வேறுபடுகிறது.
பொது விசயங்களில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட அனுபவம் உண்டு. அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டம், மிஸ்ரா கமிசன் அறிக்கை பற்றிய கலந்தாய்வு என மாநில அளவிலும் பல்வேறு பொது பிரச்சனைகளுக்காக மாவட்ட நகர அளவிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.
25. அனைத்து முஸ்லிம் இயக்கமும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?
Shajahan, Shayalkudi.
பொது பிரச்சனைகளுக்காக ஒருங்கிணைய வாய்ப்புள்ளது, ஒன்றினையும் வாய்ப்பு மிக குறைவு.
26. நீங்கள் வேட்பாளர் அறிவிக்கும் முன் இஸ்லாமிய இயக்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திநீர்களா? ஏன் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க முடியவில்லை? உங்களுக்கு சமுதாய மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்க என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டுளீர்கள்? இன்ஷா அல்லாஹ் நீங்கள் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தால், உங்களுடைய அணுகுமுறை எப்படி இருக்கும்?
Ibrahim, Singapore.
SDPI தனது வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே அனைத்து அமைப்புகளும் தங்களுக்கென ஒரே நிலைபாட்டை எடுத்து விட்டார்கள்.
SDPI மக்கள் சக்தி வாய்ந்த இயக்கமாக நிருபிக்கபடும் போது ஏனைய இயக்கங்களையும் ஒருங்கிணைக்கும் அதன் முயற்சி வெற்றி பெரும் என நினைக்கிறன்.
சமுதாய மக்களின் பொது பிரச்சனைகாக போர் குணத்துடன் போராடுகிறோம், களப்பணியாற்றுவோம் அதற்காக இழப்புகளை சந்திகின்றோம். அதே சமயம் முஸ்லிம்களுக்கிடைய உண்டாகும் கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை.
SDPI-ன் உறுப்பினர்கள் சட்டசபையில் காலடி எடுத்துவைத்தால் நீதிக்காகவும் சமுதாய உரிமைக்காகவும் யாருக்கும் பயபடாமல் குரல் கொடுப்பார்கள் அதற்காக போராடுவார்கள் உண்மையான அரசியலுக்கு இலகனமகவும் திகழ்வார்கள்.
27. யோகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? முழு விபரம் கிடைத்தால் மகிழ்ச்சி.
M.Riluwaan Khan, Chennai.
யோகா என்பது சில ஆன்மிகவாதிகளால் இன்று ஆன்மிகத்தின் ஒரு பகுதியாக கற்றுதரபடுகிறது. இவ்வாறு ஆன்மிக ரீதியான எண்ணத்தில் யோகாவை கற்பதும் செயல்படுத்துவதும் தடை செய்யப்பட்டதாகும்.
இவ்வாறில்லாமல் உடற்பயிற்சி எனும் வகையிலோ அல்லது மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலோ "யோகா" பயிற்சிகளை செய்வதும் தவறானதல்ல.
28. SDPI கட்சியின் தமிழ் நாடு மற்றும் அனைத்து மாநிலங்களின் குறிக்கோள் என்ன? பிற்காலத்தில் மனிதநேய மக்கள் கட்சியுடன் இணைந்து SDPI வேலை செய்யுமா? தற்போது SDPI மற்றும் MMK உடைய உறவு எப்படி இருக்கிறது? என்னுடைய கேள்விக்கு தாங்கள் பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.
Abdul Rasak Raseen, Thukalay.
SDPI-ன் குறிகோளையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறேன். ம.ம.க-வின் சில அணுகுமுறைகளை தவிர்த்து ம.ம.க உடன் உறவு நன்றாகவே உள்ளது. எதிர்காலத்தில் ம.ம.க உடன் இணைந்து செயல்படுவதில் SDPI-க்கு எந்த தயக்கமும் இல்லை.
29. இந்தியா முழுவதும் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக SDPI என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் பட்டியல் வெளியிட்டால் நன்றாக இருக்கும். அப்போது தான் நம் சமுதாயத்தில் எத்தனை அப்பாவிகள் சிறையில் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும், செய்வீர்களா?
Faisal Masood, Vaniyambaadi.
சிறையில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பற்றிய விபரங்களை வெளியிட முயற்சி செய்வோம்.
30. அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த பிப்ரவரி மாதம் SDPI நடத்திய சென்னை மண்டல மாநாடு மிக அருமையாக இருந்தது. ஆனால் அதில் ஏன் தொழுகை வைக்க வில்லை. நபி ( ஸல் ) அவர்கள் போர்க்காலத்தில் கூட தொழுகை நடத்தி உள்ளார்கள்.
Mohamed Faizal. Chennai.
சென்னையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். எனினும் ஒரே ஜமாத்தாக அங்கு தொழுகை நடைபெற வில்லையே தவிர தொழுவதற்காக தனியாக இடம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஜமாஅத்-களாக அங்கு தொழுகை நடைபெற்றது.
நன்றி : KKSM .தெஹ்லான் பாகவி
SDPI தமிழ்நாடு மாநில தலைவர்