SDPI மீது வெறுப்பை கக்கி வரும் TNTJ வினர்!

சமீபத்தில் மதுரை மாநகரில் ஒரு பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் கன்றின் தலை வீசப்பட்டதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை நாம் ஏற்கனவே நமது வலைப்பூவில் பதிவு செய்துள்ளோம்.
பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்


அத்தோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை நிகழ்த்தியது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தான் என்ற கூறி அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்த்து மதுரை முஸ்லிம் ஜமாத்தினர் ஒன்று திரண்டு காவல்துறை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில்  ஒரு பகுதியாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்


இப்படி இருக்க த.த.ஜவினர் மட்டும் தமது வலைப்பூவில் "இந்து முஸ்லிம் கலவரத்திற்கு வித்திட்ட எஸ்.டி.பி.ஐ-யினர்" என்று வழக்கம் போல் எஸ்.டி.பி.ஐற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யத்துவங்கியுள்ளனர். செய்தித்தாழில் வரும் செய்தியை அப்படியே எடுத்து ஆதாரமாகக்கொண்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மதுரை முஸ்லிம்கள் நடுநிலையாக இருந்து யோசித்து பின்னர் இது ஒரு பொய் வழக்கு என்றும், காவல்துறை இரட்டை நிலைபோக்கை எடுத்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளது என்றும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிற வேளையில், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு அமைப்பின் மீது கொண்ட வெறுப்பால் உண்மைக்கு புறம்பான செய்திகளை த.த.ஜவின் கொள்கை கிழிசல்கள் பரப்பி வருகின்றனர்.

நடு நிலையான மக்கள் நன்கறிவார்கள் ஒரு போதும் எஸ்.டி.பி.ஐனர் மதக்கலவரத்திற்கு தூண்டுகோலாய் இருக்க மாட்டார்கள் என்று, ஆனால் முஸ்லிம்களிடத்தில் உள்சண்டையை தூண்டிவிடுவதற்கும், முஸ்லிம்களை கூறு கூறாக பிரிப்பதற்க்கு கங்கனம் கட்டிக்கொண்டு திரிபவர்கள் த.த.ஜவினர் தான் என்பதை அனைவரும் அறிவர்.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் ஒரு செய்தி உங்களுக்கு கிடைத்தால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை பிறருக்கு தெரிவியுங்கள் என்று. ஆனால் இவர்கள் அப்படி செய்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த வழக்கின் பின்னனிகளை கண்டுபிடிப்பதற்காக உண்மை கண்டறியும் குழு ஏற்பாடு செய்யப்பட்டு நீண்ட விசாரணைக்குப்பின் இது ஒரு பொய் வழ்க்கு என்று கூறியுள்ளது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த தாங்களாகவே தங்களுக்கு ஆப்பு வைத்துக்கொள்வார்கள் என்பது சில வருடங்களுக்கு முன்பாக தென்காசி குண்டு வெடிப்பில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. அப்படி இருக்க அவர்களே அதை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்ச்சித்திருக்கலாம் என்றும் கூறுகிறது அக்குழு.

ஒரு சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பினால் நீதியில் தவறிழைத்து விட வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். அதை செய்தது எஸ்.டி.பி.ஐனர் தான் என்றால் அதை உறுதி செய்வது நீதி மன்றத்தின் வேலை. ஆனால் இதுனால் வரை இவர்கள் செய்யும் பிரச்சாரத்தின் விளைவு சமூக மக்களுக்கு இவர்கள் மீது இருக்கும் வெறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறதே தவிற‌ வேறில்லை.
Thanks : Muthu Ismail

Related

TNTJ 3778879551529013730

Post a Comment

  1. faizal koothanallurApril 7, 2011 at 9:42 PM

    அவர்கள் குறை சொல்லாத முஸ்லிம் இயக்கம் உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லை இல்லை.
    ( எ.கா ) எகிப்து முதல் தமிழ் நாடு வரை

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item