சங்க்பரிவாரின் வெறியாட்டம் : நான்கு பயங்கரவாதிகள் கைது

நேற்று முன்தினம் சங்க்பரிவார் பயங்கரவாதிகள் கேரள மாநிலம் ஒற்றப்பாலத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நான்கு சங்க்பரிவார் பயங்கரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

போராட்டம் நடத்தும் வேளையில் ஆட்டோவை அடித்து உடைத்த சம்பவத்தில் வேணுகோபால்(வயது 42), சங்கரன் குட்டி( வயது 35), மாக்குண்ணி, ஜெயன்(வயது 44) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.

ஒற்றப்பாலம் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்த தாக்குதல் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முழு அடைப்பைத் தொடர்ந்து மக்கள் வாழ்க்கை மாமூல் நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று அசம்பாவிதங்கள் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த புதன்கிழமை ஒற்றப்பாலம் எஸ்.டி.பி.ஐ மண்டல தலைவர் மரைக்காயர் பைக்கில் செல்லும் பொழுது சங்க்பரிவார பயங்கரவாதிகள் அவரை வெட்டிக்காயம் ஏற்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து உருவான அசம்பாவித சம்பவங்கள் பிரச்சனைக்கு காரணமாகின.

எஸ்.ஐ வேலாயுதன் தலைமையிலான இருநூறு போலீசார் ஒற்றப்பாலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நடந்த பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் நடத்திய முழு அடைப்பில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறைக்கு வழிவகுத்த போலீசாருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரைக்காயரை கொல்ல முயன்றவர்களை இதுவரை கைது செய்ய முடியாதது போலீசாரின் கையாலாகதனம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Thoothu Online

Related

SDPI 8963921293373802307

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item