பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!
http://koothanallurmuslims.blogspot.com/2009/12/blog-post_23.html
மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.
நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றும் பெருமையாக அவர்கள் ஒப்புக் கொள்ள வேறு செய்துள்ளனர்.
ராஜ் தாக்கரேவை யார் பளார் என கன்னத்தில் அறைகிறாரோ அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்படும் என சமீபத்தில் அகில பாரத பிராமணர் மகா சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ராஜ் தாக்கரே கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.
அதன் விளைவே நேற்று இரவு நடந்த சித்திவிநாயகர் கோவில் தாக்குதல் என்று கூறப்படுகிறது.
கோவிலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த பக்தர்களை மரக் கட்டைகளால் ராஜ் தாக்கரே கட்சியினர் காட்டுத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.