சுப்ரீம் கோர்ட்டின் 11 கட்டளைகள் மீறல்: கைது செய்யும்போது பின்பற்றாத போலீஸ்
எனவே நம் சமுதாயத்தை சேர்ந்த யாரையாவது போலீஸ் விசாரிக்க வந்தாலும், கைது செய்ய வந்தாலும், அடையாள அட்டை மற்றும் கைது செய்வதற்கான ஆவணம் இருந்தால் மட்டுமே கைது செய்ய அனுமதிக்க வேண்டும்.
விசாரணை என்று போலீசார் கூப்பிட்டால் போலீஸ் ஸ்டேஷன் போவதை தவிர்க்கவும், அங்கே தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், விசாரணையை நீங்கள் விரும்பிய இடத்திலே வைத்து உங்களை விசாரிக்கலாம், நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போனால் பல போலீஸ் காரர்களால் நீங்கள் மிரட்டபட்டு செய்யாத குற்றத்தை ஒப்புகொள்ளும் வரை நீங்கள் விசாரிக்க படுவீர்கள்.
அதையும் மீறி விசாரனைக்கு அழைத்தால், உங்களது வக்கீல்கலையோ அல்லது உங்களது உறவினர்களையோ அழைத்து செல்வது நல்லது.
முஸ்லிம் சமுதாயத்தினர் குற்றம் புரிவது அரிது, ஆனாலும் இன்று சிறையில் அதிகமாக இருப்பது முஸ்லிம் சமுதாயத்தினர் தான், அதிலும் விசாரணை கைதிகளே அதிகம் என கருத்து கணிப்பு கூறுகிறது.
நமது மக்கள் காவல் துறையினரை கண்டு பயப்பட தேவை இல்லை, அவர்கள் நம்மை அடித்தாலோ அல்லது கேவலமாக திட்டினாலோ அவர்கள் மேல் வழக்கு தொடர நமக்கு உரிமை இருக்கு என்பதை நம் சமுதாய மக்கள் மறந்து விட கூடாது, நாம் ஒரு போலீஸ்காரர் மேல் வழக்கு போட்டால் அவருக்கு அந்த வழக்கு முடியும் வரை பணி உயர்வு கொடுக்க இயலாது, அவர் மேல் காவல் துறையில் ஒரு கருப்பு புள்ளி என்றும் இருக்கும்.
உங்களிடம் பாஸ்போர்ட்-க்கு விசாரனை வருபவர் லஞ்சம் கேட்டால் நீங்கள் அவர் மேல் தாரளமாக வழக்கு தொடரலாம், இது இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமக்களும் உள்ள உரிமை. இது போல் ஒவ்வொரு மக்களும் இந்திய சட்டத்தின் அடிப்படையை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
நம் சமுதாய மக்களுக்காக, இஸ்லாமிய சமுதாய அமைப்புகள் சட்ட விழிப்புணர்வு முகாம், legal Guidance Program போன்றவற்றை நடத்துகின்றன, இதில் கலந்து கொண்டு நம் சமுதாயதிற்கு எதிராக நடக்கும் தீமைகளை கட்டுபடுத்த வேண்டும், ஒவ்வொரு சமுதாய இளைஞர்களும் சட்டதின் அடிப்படையை அறிவது மிகவும் அவசியம்.
ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.
மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் பாண்டியன் டிச.,17ல் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டார். விசாரணையில், செக் மோசடி வழக்கில் ஆந்திரா போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின் "பேக்ஸ்' மூலம் அவர்கள், மதுரை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். அதேபோல், திருட்டு நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களை விசாரணைக்காக, தகவல் தெரிவிக்காமல் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். இதைக் கண்டித்து உரிமையாளர்கள் கடையடைப்பு போராட் டங்களில் ஈடுபடுவதும், பின் போலீசார் சமரசம் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், கைது செய்யும்போது சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை.
இதுகுறித்து, 1996ல் சுப்ரீம் கோர்ட் 11 கட்டளைகளை பிறப்பித்தது.
1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.
2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.
3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.
4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.
6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.
7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.
8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.
9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.
10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.
11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.