டிசம்பர் 6 - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தர்ணா போராட்டம்


புதுடெல்லி: பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்டு 17வது ஆண்டு நினைவு தினமான நேற்று லிபர்ஹான் கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ள குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடெங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணாவில் மக்கள் ஆவேசத்துடன் திரளாக கலந்துக்கொண்டனர்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மஹராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டன நிகழ்ச்சிகள் நடந்தேறியது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய தர்ணாவில் டெல்லி பல்கலைகழக் பேராசிரியர் ஜி.என்.ஸாயிபாபா சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தது எந்தவொரு கமிஷன் அறிக்கை இல்லாமலே உலகம் அறிந்தபொழுதும் தற்பொழுதும் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்க இயலவில்லை. பாப்ரி மஸ்ஜித் புணர் நிர்மாணிப்பதுவரை அதற்கான போராட்டம் தொடரும்" என்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர் ஷெரீஃப் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ.சயீத், துணைத்தலைவர் ஸாஜித் சித்தீகி, டெல்லி மஜ்லிஸே முஸாவரா தலைவர் டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், பீஸ் பார்டி பொதுச்செயலாளர் யாமின் சவுத்ரி, டெல்லி பல்கலைகழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

போராட்டமுடிவில் லிபர்ஹான் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டிய குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்று பிரதமருக்கு மனுவை அளித்தனர்.

Related

pfi 5205882484590896851

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item