மதுரையில் சமுதாய அமைப்புகள் ஓரணியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/12/blog-post_15.html
கோரிபாளையம் காயிதே மில்லத் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் கொலை வழக்கு போட்ட காவல் துறையினரை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கண்டன ஆர்பாட்டம்
மதுரை கோரிப்பாளையம் காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டேண்டில் நடைபெற்ற பிரச்னையில் சம்பந்தமே இல்லாத பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு போட்ட செல்லூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மோகன் மீது நடவடிக்கை கோரி முறையாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.
அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தடைமீறி நேற்று PFI நடத்தியது. அதில் சமுதாய அமைப்புகளான இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக மற்றும் மமக ஆகியவை கலந்து கொண்டன. ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது.
பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து சமுதாய அமைப்புகள் ஒரணியில் இணைந்தன.
அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் பொதுப் பிரச்னைகளில் சமுதாயம் ஒன்றிணையும் என்பதையே இது காட்டுகிறது.