“UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கம்” – தமிழக தலைவராக அ. மார்க்ஸ் தேர்வு!

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) என்ற கருப்புச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி “UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கம்” கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் துவங்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் குழு நேற்று (07.02.2014 வெள்ளிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது அக்குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய அளவிலான இப்பிரச்சார இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி கடந்த ஜனவரி 23 அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 84 பேர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் இப்பிரச்சார இயக்கத்தை கொண்டு செல்வதற்கான செயல் திட்டங்கள் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

யு.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசியல் அழுத்தத்தையும், அரசியல் சூழலையும் உருவாக்குவதற்கு தேசிய கமிட்டியின் பிரநிதிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட சுற்றுப் பயணம் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இம்மாதம் நடைபெறுகிறது. தமிழகத்தின் இப்பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தமிழ் மாநில கமிட்டி உருவாக்கப்பட்டது. தலைவராக அ. மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்). தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தேசிய பிரதிநிதிகள் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Related

முக்கியமானவை 5338636079082924015

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item