இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதல்
http://koothanallurmuslims.blogspot.com/2014/02/blog-post_4342.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது. இவ்வருடம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 3 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளோடு ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக அனுமதியும் வழங்கியிருந்தனர். இருப்பினும் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது.
எழுத்துப்பூர்வமாக பேரணி மற்றும் பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின், பேரணி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மைதானத்தில் மக்கள் கூடும் வரை அனுமதித்து, பின்னர் தடை விதித்தது விநோதமானது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் கூர்ந்து கவனித்தே வந்தார்கள். காவல்துறை அனுமதி வழங்கிய பின்பும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வாகனம் போன்ற ஏற்பாடுகளை காவல்துறையினர் தயார் செய்து வைத்தது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. இத்துனை ஏற்பாடுகளை செய்த பிறகே காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் மைதானத்தில் கூடிய பின்னர் தடை விதிக்கிறார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் சமயத்தில் சில விஷமிகள் காவல்துறையின் மீது கல்வீசினர். அவர்களில் இருவரை பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் இருந்தனர். இருப்பினும் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியினை நடத்த விட கூடாது என்று முன்னரே திட்டமிட்டது போல் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருந்தது. திடிரென்று காவல்துறை கூட்டத்தின் மீது தடியடி நிகழ்த்தினர். பொது மக்கள் செய்வதறியாது நின்ற சூழ்நிலையில் கண்ணீர் புகை வீசப்படுகிறது. ரப்பர் குண்டுகள் வீசப்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ குழுமத்தையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களது விலை உயர்ந்த வீடியோ காமிராக்கள் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டும் பிடுங்கிசெல்லப்பட்டும் உள்ளது. இந்த தாக்குதலில் பத்திரிகை நிருபர்களும் புகைப்பட கலைஞர்களும் தப்பவில்லை. இப்படியாக தேவையில்லாமல் ஒரு கலவர சூழல் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் வழக்குகளை நடத்தி வந்த வழக்கறிஞர்களை குறிவைத்து காவல்துறை தாக்குதல் நடத்தியது காவல்துறை முன்விரோதத்துடன் செயல்பட்டது தெளிவாகிறது. வழக்கறிஞர்கள் நஜ்முதீன், அலாவுதீன் மற்றும் சட்ட கல்லூரி மாணவரான முஹம்மது யூசுஃப் ஆகியோர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் நஜ்முதீன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருக்கிறார். காவல்துறையின் மொத்த நடவடிக்கையையும் பார்க்கும் போது காவல்துறை முன்னரே பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்தி அத்துமீறலை நிகழ்த்த திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நிகழ்ச்சியினை ரத்து செய்து கூடியிருந்த அனைவரையும் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கடந்த (2013)ம் வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்க திருச்சி காவல்துறை கடும் கெடுபிடிகளை கொடுத்தது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சோதனை, முஸ்லிம் கல்லூரி மாணவர்களிடம் விசாரனை போன்ற தேவையில்லாத கெடுபிடிகள் கடந்த ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயக அடிப்படையில் நடத்தவிருக்கும் ஒரு இயக்க நிகழ்ச்சிக்கு இவ்வளவு கெடுபிடிகளை கொடுப்பது தேவையற்றது. இந்நிலையில் திருச்சி மாவட்ட செயலாளர் ஸஃபியுல்லா நீதிமன்றத்தில் காவல்துறையின் கெடுபிடிகளை விசாரிக்க அளித்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரனைக்கு வந்தது. இந்த குரோதத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு இந்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளதாக தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது தனி மனித சுதந்திரத்தை தடுக்கும் செயலே அன்றி வேறில்லை. இந்த சம்பவத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பாப்புலர் ஃப்ரண்டின் நீதிக்கான போராட்டம் தொடரும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக ஒரு நேர்மையான நீதி விசாரனை நடத்தி இந்த கொலைவெறி தக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
இப்படிக்கு
ஏ. எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.