கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி
http://koothanallurmuslims.blogspot.com/2014/02/blog-post_427.html
நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியான நேற்று (திங்கள் கிழமை) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, வெகுஜன பேரணி, பொதுக்கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கூத்தாநல்லூர் நகரம் சார்ப்பாக லெட்சுமாங்குடி, பெரிய தெரு, ரேடியோ பார்க், கமாலியா தெரு, மேல தெரு ஆகிய 5 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ண கொடியை நகர நிர்வாகிகள் ஏற்றினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூத்தாநல்லூர் நகர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.