தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைப்பிடிக்கப்பட்டது!

நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ருவரி 17-ஆம் தேதியான நேற்று(திங்கள் கிழமை) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, வெகுஜன பேரணி, பொதுக்கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தப்பட்டன.தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட அணிவகுப்பு மற்றும் பேரணியில் காவல்துறை பொதுமக்கள் மீது  தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டது.இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.

’மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இந்நிகழ்ச்சிகளில் 2014-ஆம் ஆண்டிற்கான பல்வேறு சமூக மேம்பாட்டுத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.கிராம வளர்ச்சித்திட்டம், வீடுகள் கட்டிக்கொடுத்தல், கல்வியில் சக்திப்படுத்தும் திட்டங்கள், சுகாதாரத்தை பேணும் திட்டங்கள், குடும்ப கவுன்சிலிங் மையங்கள், கல்வி கடன் உதவி திட்டங்கள், வட்டியில்லா சிறு கடன் திட்டங்கள், சுய தொழில் திட்டங்கள், சுய உதவி குழுக்கள், ஓர் ஆசிரியர் கல்வி நிலையங்கள், கல்விக்காக கிராமங்களை தத்தெடுத்தல் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டங்களை நோக்கமாக கொண்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு சமூக மேம்பாட்டு பணிகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ரூ.9 கோடியை செலவழித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்த அணிவகுப்பு, பேரணி, பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் அவர்களும், மணிப்பூரில் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் அவர்களும் கலந்துகொண்டனர்.

கேரளாவில் 15 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தையொட்டி அணிவகுப்பு, பேரணி, பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.தலைநகர் மாவட்டத்தில் நெடுமங்காட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார்.






Related

முக்கியமானவை 5320356166807888106

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item