இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.

இ ந் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி தொகுத்து வழங்கினார். பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அறிமுக உரை நிகழ்த்தி விவாதத்திற்கான தலைப்பினை முன்வைத்தார்.

இந்திய முஸ்லிம்களின் அடையாளத்தன்மை (IDENTITY) பறிக்கப்பட்டு வருவதாகவும், முஸ்லிம்கள் என்றே ஒரே காரணத்திற்காக  கல்வி, அரசு வேலைவாய்ப்பு, வாடகைக்கு வீடு கிடைக்காத அவல நிலைகள் ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். முஸ்லிம்களின் அடையாளத்தை எவ்வாறு கட்டிக்காக்க வேண்டுமென்றும், முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுவரும் இவ்வகையான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் விவாதம் நடைபெற்றது.  அதன் பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர் என்.முஹம்ம்து அவர்கள் எழுதிய "இடஒதுக்கீடும் முஸ்லிம்களும்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இதனை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட சமுதாய தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இறுதியில் ஜின்னா சாஹிப் அவர்களி உரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூதாய தலைவர்கள் பின்வருமாறு:

1. சகோ. முனீர் (INTJ)
2. முஹம்மது ஹனீஃபா (இஸ்லாமிய தொண்டு இயக்கம்)
3. பேராசியர். எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் (இஸ்லாமிய இலக்கிய கழகம்)
4. சகோ. ஆளூர் ஷானவாஸ்
5. சகோ. ஹாமித் பக்ர் மன்பஈ (இஸ்லாமிய ஐக்கிய பேரவை)
6. சகோ. மேலை நாசர் (சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை)
7. சகோ. தர்வேஷ் ரஷாதி (தலைமை இமாம், வடபழனி)
8. சகோ. காயல் மஹபூப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
9. சகோ. உமர் ஃபாரூக் (மறுமலர்ச்சி தேசிய லீக்)
10. சகோ. நிஜாமுதீன் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)
11. சகோ. யூசுஃப் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
12. தெஹ்லான் பாகவி (SDPI)

Related

முக்கியமானவை 3374494214982360769

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item