அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
http://koothanallurmuslims.blogspot.com/2012/07/blog-post_11.html
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி சென்னையில் அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம், கிறிஸ்தவ, ஹிந்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டு, அழிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை எதிர்த்து அனைத்து மதத்தைச் சார்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கின. இவ்வமைப்பு சார்பாக நேற்று(ஜூலை 10) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம். சின்னப்பா இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இந்த ஆர்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் தமிழக துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயீல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி, தென்னிந்திய திருச்சபையின் தலைவர், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஐ.நா தலையிடவும், அவர்கள் அனைத்துரிமைகளையும் பெற்று வாழும் வகையில் அரசியல் தீர்வு உருவாகவும் இந்தியா பல்வேறு தளங்களில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.