ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு வெளியேற்றுகிறது

ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமிற்கு அவர்களை அனுப்புவோம் என்றும் மியான்மர் அதிபர் தைன் ஸைன் அறிவித்துள்ளார். 10 லட்சம் எண்ணிக்கையிலான ரோஹிங்கியா முஸ்லிம்களை இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஐ.நா அகதி முகாமிற்கு அனுப்புவதே தங்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்று ஸைன் கூறுகிறார்.

ஆனால், மியான்மரின் கோரிக்கையை ஐ.நா அகதிகள் ஏஜன்சி அங்கீகரிக்கவில்லை. பல தசாப்தங்களாக மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் அரசு கடுமையான பாரபட்சத்தை காண்பிப்பதாகவும், கல்வி கற்கவோ, வேலை தேடவோ வாய்ப்புகளை அளிக்காமல், பயண தடைகள் உள்பட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு இவர்கள் மீது சுமத்துவதாகவும் ஐ.நா குற்றம் சாட்டுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கிடையே மியான்மரில் நடந்த பல்வேறு இனக்கலவரங்களும், அரசு நடத்தும் ஒருதலை பட்சமான அடக்குமுறைகளும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து புலன்பெயரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல தசாப்தங்களாக நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை, தங்களுடைய குடிமக்கள் அல்ல என்று சர்வாதிகார மியான்மர் அரசு கூறுகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை அங்கீகரிக்க முடியாது என்று மியான்மர் அரசு திமிராக கூறிவருகிறது.

Related

சமுதாயம் 853570478413781252

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item