ரோஹிங்கியா முஸ்லிம்களை காப்பாற்ற ஐ.நா தலையிட வேண்டும் – ஈரான்
http://koothanallurmuslims.blogspot.com/2012/07/blog-post_25.html
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் நடைபெறும் இன அழித்தொழிப்பு தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா அவசரமாக தலையிட வேண்டும்என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நாவில் ஈரானின் பிரதிநிதி முஹம்மது கஸாயி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பேணப்படுகிறது என்பதை ஐ.நா உறுதிச்செய்ய வேண்டும் என கஸாயி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமை தலைவர் நவி பிள்ளை ஆகியோரிடம் இது தொடர்பான கடிதத்தை கஸாயி ஒப்படைத்தார். மியான்மரில் முன்பு இதைப்போன்ற சூழல்களில் தலையிட்டது போலவே ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரத்திலும் தலையிடவேண்டும் என பான் கீமூனுக்கு அளித்துள்ள கடிதத்தில் கஸாயி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தில் செயல்படாமல் இருந்தால் கடுமையான விளைவுகளை மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்திக்கவேண்டிய சூழல் உருவாகிவிடும் என கடிதம் எச்சரித்துள்ளது.