P.V.முஹம்மது படுகொலை வழக்கு – 9 RSS தீவிரவாதிகளுக்கு ஆயுள்

கேரள மாநிலம் தலச்சேரியைச் சார்ந்த நடப் ( தற்போதைய PFI  ) உறுப்பினர் பி.வி.முஹம்மது(வயது 50) கொலை வழக்கில் ஒன்பது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி அதிகாலை ஐந்துமணி அளவில் தனது வீட்டில் இருந்து மஸ்ஜிதுக்கு ஃபஜ்ர்(அதிகாலை) தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார் பி.வி.முஹம்மது. அப்பொழுது அவர் சென்றுகொண்டிருந்த வழியில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் முஹம்மதை தடுத்து நிறுத்தி ஆயுதங்களை உபயோகித்து படுகொலைச் செய்தனர். தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் ஃபிரோஸ்(வயது 18) காயம் ஏற்பட்டது.

இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தீவிரவாதிகளான எம்.சந்திரன்(வயது 25), ரத்னாகரன்(வயது 34), ஷைஜு(வயது 23), பிரதீபன், பிஜு என்ற பிஜேஷ், பாபு(வயது 26), கே.கே.பத்மனாபன் என்ற பப்பன், பி.வினீஷ்(வயது 23), ஷைஜு என்ற உண்ணி(வயது 22) ஆகியோருக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கே.பாபு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மூன்றாவது குற்றவாளியான ஷைஜு, 307-ஆம் பிரிவின் படியும் குற்றம் புரிந்தது நீதிமன்றத்திற்கு தெரியவந்ததால் இவர் மேலும் 7 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும். ரூ.5 ஆயிரம் அபராதமாக செலுத்தவேண்டும். இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதர நபர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்தது. 14-வது குற்றவாளி சதீஷ் மீதான விசாரணை இதுவரை நடக்கவில்லை.

பி.வி.முஹம்மதின் மகன்களான ஃபிரோஸ், ஃபாயிஸ் உள்பட 22 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 45 ஆவணங்களை அரசு தரப்பு ஆஜர்படுத்தியது. ஸ்பெஷல் அரசு தரப்பு வழக்குரைஞர் சி.கே.ஸ்ரீதரன், வழக்கறிஞர் பி.சி.நவ்ஷாத் ஆகியோர் ஆஜரானார்கள்.

Related

இயக்கங்கள் 3275073371680330964

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item