சென்னையில் PFI நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள், ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.


இந்த முஸ்லிம் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இருந்து துவங்கிய மாபெரும் கோரிக்கை பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அணிவகுத்து வர ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்லிம்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி தெற்கு கூவம் சாலை வழியாக லாங்ஸ் கார்டன் பாண்டியன் சந்திப்பில் நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்  பாப்புலர் ஃப்ரண்டின் கடலூர் மாவட்ட தலைவர் மெளலவி ஆபிருதீன் மன்பயீ வரவேற்புரையாற்ற, ஏ.கே. முஹம்மது ஹனீஃபா (முஸ்லிம் தொண்டு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுஃப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஷாஹித், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஃபாரூக், விழுப்புர மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹைதீன் குட்டி, ஆகியோர் தீர்மானங்களை படித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் வேலூர் மாவட்ட தலைவர் எஸ். ஷஃபியுல்லாஹ் நன்றியுரையாற்றினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மேதகு தமிழக ஆளுநர் ஆகியோரிடம் மறுநாள் வழங்க இருக்கின்றது என பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் தெரிவித்தார்.









Related

இயக்கங்கள் 8875469663986960500

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item