ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்!

 சமீபத்தில் ஆந்திர மாநிலம் சங்கரரெட்டியில் நடந்த வகுப்பு வாத வன்முறையால முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் பெருமளவில் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் சேதப்படுத்தப்பட்டன. இதற்கான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை வெடித்துள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் ஹைதராபாத் புது நகரம் அருகே உள்ள மதன்பேட், சைதாபாத், குர்மகுடா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங்தள் இயக்கத்தைச்சேர்ந்த குண்டர்கள் சிலர் குர்மகுடா அருகேயுள்ள ஹனுமன் மந்திர் எனும் இடத்திலிருந்து பேரணியாக வந்தனர். ஹனுமன் மந்திர் அருகே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை வீசியதாக கூறி முஸ்லிம்களை எதிர்த்து பேரணி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பேரணியில் கலந்து கொண்டு பஜ்ரங்தள் தொண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பேரணி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி அருகே வந்தவுடன், பஜ்ரங்தள் குண்டர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்க்களை வீசத்தொடங்கினர். இதில் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கிறது. மேலும் 10ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். 9 நபர்கள் படுகாயமுற்றதாகவும் கூறப்படுகிறது. குர்மகுடா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் சசியாதவ் தான் இந்த பேரணிக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றுள்ளார்.
ஃபாசிஸ குண்டர்களால் தீவைத்து கொழுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஆட்டோ
சைதாபாத்தில் வசித்து வருபவர் முஹம்மது தஹ்சீன், இவரது வீட்டை பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் மேலும் கூறும்போது ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஒரு கூட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் நுழைந்து முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். என்னுடைய வீட்டை கற்களை கொண்டும், பெட்ரோல் குண்டுகளைக்கொண்டும் கடுமையாக தாக்கினர். இவை அனைத்தும் காவல்துறையினரின் கண் முன்பாக நடந்தேறியது. அவர்களிடம் சென்று உதவி கேட்டதற்கு மரியாதையாக வீட்டிற்குள் ஒளிந்து கொல்லுங்கள் இல்லையென்றால் நீங்களும் அடிபடுவீர்கள் என்று மிரட்டினார்கள். என்று அவர் மேலும் கூறினார்.

பஜ்ரங்தள் குண்டர்கள் சில முஸ்லிம் பெண்களின் பர்தாவை பிடித்து இழுத்து கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றது. வன்முறையாளர்கள் காலை 7 மணி முதலே பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் தயாராக இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்காங்கே பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் வன்முறையில் தொடந்து ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களை கலைக்க லத்தி சார்ஜும் வேறு சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.

காவல்துறை மூத்த அதிகாரிகளான ஆணையர் ஏ.கே. கான் உட்பட அனைவரும் வன்முறை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் ஆந்திராவில் தொடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் குஜராத் போன்று நடைபெறுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய எல்லா பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Related

சமுதாயம் 4905999019771761974

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item