மைசூரில் NWF நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/04/nwf.html
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக மைசூர் பேகம்
ரஜியா சுல்தான் மேடை (மெஸ்கோ ஐ.டி.ஐ வளாகம்) யில் வரதட்சணை ஒழிப்பு
பிரச்சாரம் நடைபெற்றது.
வரதட்சனை
என்பது கொடிய விஷமாகும், இதனால் சமுதாயமும், பல குடும்பங்களும்
சீரழிந்துள்ளது. வரதட்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம்
இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட NWF தேசிய தலைவர்
ஷாஹிதா தஸ்னீம் கூறும்ப்போது திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையே ஏற்படும் ஓர் புதிய உறவாகும். அது மணமக்களை மட்டுமல்லாது அவர்களின்
குடும்பங்களை இணைக்கிறது.
துரதிஷ்டவசமா
பெரும்பாலான திருமணங்கள் இன்று வியாபாரமாகிக்கொண்டு வருகிறது. மணமகன்
என்பவன் அதிகப்படியான பணத்தை கொடுத்து வாங்கப்படுகிறான். என அவர் கூறினார்.
கர்நாடக
மாவட்ட தலைவர் ஷாஹிதா அஸ்லம் தலைமை உரையாற்றினார். மீரா நாயர், சமூக
ஆர்வளர் நந்தா ஹெலிமேனா, டாக்டர் ரதி ராவ், லுபுனா சிராஜ், ஆகியோர் கலந்து
கொண்டனர்.