முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...

முத்துப்பேட்டை, டிசம்பர் 09: (Exclusive Muthupettai Express) முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து முஹல்லாவையும் ஒருங்கிணைப்பது குறித்து பல்வேறு முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து ஊரில் உள்ள அனைத்து முஹல்லாவிர்க்கும் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதத்தை அனுப்பி அந்த அந்த முஹல்லாவிற்கு தல 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்தது. இந்த குழுவின் பெயர்களை கடந்த 5 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிரிந்தது.

இந்த கடிதத்திற்கு அனைத்து முஹல்லாவும் வரவேற்றுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து முஹல்லாவில் உள்ள 10 பேரை ஒருங்கிணைத்து ஓர் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிரிந்தது. அதன் அடிப்படையில் இன்று 09 .12 .2011 ஆம் தேதி முஹைதீன் பள்ளி வாசலில் சரியாக 5 மணியளவில் அனைத்து முஹல்லா கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து முஹல்லா வாசிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தார்கள். அதில் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதியான சோழநாடு ஜனாப். நெய்னார் முஹம்மது அவர்கள் முத்துப்பேட்டைக்கு ஒரு தலைவர் நியமிக்கலாமா இல்லை 10 பேர் கொண்ட குழு அமைக்கலாமா என்ற கேள்வியை அனைத்து முஹல்லா வாசிகளிடமும் தனித்தனியாக கேட்கப்பட்டது. அதில் எல்லா முஹல்லாவும் 10 பேர் கொண்ட குழுவை நியமித்தால் நன்றாக இருக்கும் என்றும், ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு நபரை தலைவராக நியமித்தால் தனிமனிதன் அதிகாரம் நிலைக்க வாய்ப்பு உருவாகும் என்றும் அப்போது தெரிவித்தார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒவ்வொரு நபரை தலைவராக நியமித்து 10 பேர் கொண்ட குழுவாக நியமிக்காபட்டன.

கமிட்டியினர் விவரம் பின்வருமாறு:
1 .N .காதர் உசேன்
2 .S .முஹம்மது மாலிக்
3 .A .அபூபக்கர் சித்திக்
4 .A .முஹம்மது முஹைதீன்
5 .M .A .K .சிராஜ் தீன்
6 .M .நிசார் அஹமது
7 .N .A .சஜாத்
8 .S .காதர் பாட்சா
9 .S .S .பாக்கர் அலி
10 .L .தீன் முஹம்மது

மேலும் நியமிக்கப்பட்ட 10 நபரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு அந்த 10 நபர்களிடமும் இக்கூட்டத்தின் தலைவர் சோழநாடு ஜனாப். நெய்னார் முஹம்மது அவர்கள் தனித்தனியாக கையெழுத்தை பெற்றார். இதன் பின்பு காஃபாரா ஓதி கூட்டம் முடிவடைந்தன. மீண்டும் அனைத்து முஹல்லா கூட்டம் ஒருங்கிணைந்தது எல்லா மக்களுக்கும் ஓர் பொன் சிரிப்பாகவே இருந்தது.

அதில் முஹல்லாவின் விபரம்:

1 ) குட்டியார் பள்ளி
2 ) குத்பா பள்ளி
3 ) அரபு சாகிப் பள்ளி
4 ) முஹைதீன் பள்ளி
5 ) புதுப் பள்ளி
6 ) மக்கா பள்ளி
7 ) மதினா பள்ளி
8 ) ஆசாத் நகர் பள்ளி
9 ) பேட்டை பள்ளி
10 ) தர்ஹா பள்ளி











Muthupettai Express

Related

TAMIL MUSLIM 787961057485929738

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item