சுய தொழில் செய்வதற்கு உதவி வரும் ரிஹாப் இந்தியா

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் இரண்டு வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்வதற்கான உதவிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் சைக்கிள் ரிக்ஸா வழங்குகிறார். உடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் ஆகியோர்.
அதன் அடிப்படையில் வட்டிக்கு கடன் பெற்று சைக்கிள் ரிக்ஸா வாங்கி அதன் மூலம் வட்டியை மட்டுமே அடைத்துக்கொண்டு வட இந்தியாவில் எண்ணற்ற முஸ்லிம்கள் தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் வட்டியில்லாமல் அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஸாக்களை வழங்கி அதன் மூலம் ஓரளவிற்கு மாத வருமானம் ஈட்டுவதற்குண்டான் வழிவகை செய்தது ரிஹாப் இந்தியா.

ரிஹாப் இந்தியா மூலம் வட்டியில்லாமல் சைக்கிள் ரிக்ஸாக்களை பெற்ற 99% அதன் மூலம் சம்பாதித்து சைக்கிள் ரிக்ஸாவிற்குண்டான பணத்தை திருப்பி கட்டியுள்ளனர். திரும்பப் பெற்ற பணத்தின் மூலம் இதே முறையில் மற்றவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஸா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவில் வட்டியில்லா கடன் உதவி செய்வதற்கும் ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் 51 நபர்களுக்கு சைக்கிள் ரிக்ஸா வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொள்ள இருகிறார்கள்.

ரிஹாப் இந்தியா பற்றி:


கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் எந்த ஒரு இலாபத்தையும் எதிர்பார்க்காமல் முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே துவங்கப்பட்டது. தற்போது ரிஹாப்  இந்தியா டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மட்டுமே சேவைகளை செய்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் பணியை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இறைவனின் மிகக்கிருபையால் முதல் காரியமாக 49 வீடுகளை கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளனர். முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இவ்வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 1000 வீடுகளை கட்டுவதற்கு ரிஹாப் இந்தியா தீர்மானித்துள்ளது.

ரிஹாப் இந்தியா தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே மேற்கு வங்காளத்தில் குடிநீர் வசதி செய்வதற்கான ஏற்பாட்டை செய்தது சிறப்பம்சமாகும். இந்த ஏற்பாட்டின் மூலம் தற்போது மேற்கு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று வரை பயன் அடைந்து வருகின்றனர்.

மேற்குவங்காளம் முர்ஷிதாபாத்தில் உள்ள பெராம்பூர் நகரில் வருகின்ற ஜனவரி 1, 2012 அன்று சைக்கிள் ரிக்ஸா மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. அதே போன்று அன்றைய தினமே முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி என்னும் இடத்தில் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 ஊற்று கிணறுகள் தோண்டப்பட்டு நீரை இரைச்சுவதற்கான உரிய  சாதனங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  சாகர்திகி பகுதி மக்கள் குடிநீரை எடுப்பதற்காக பல கி.மீ நடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும் அதே தினத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும், மருத்துவ உதவி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related

SDPI 3064582767764614311

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item