தமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் – சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி

எகிப்திய பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பில், இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அப்துல் முஆத் இப்றாஹிம் தெரிவித்துள்ளார். இவ்வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் கட்சியின் தலைவருமான டொக்டர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார்.

எகிப்திய மக்கள் இன்று மூன்று தசாப்தகால அநியாயம், அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஜனநாயகம், சுதந்திரம், நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அபிவிருத்திக்காக அவர்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை சிறந்த முறையில் நிறைவேற்ற அல்லாஹுதஆலாவின் உதவியை வேண்டுகிறோம்.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் 83 வருட கால நம்பிக்கையை அல்லாஹுவுதஆலா இப்போது நிறைவேற்றியுள்ளான். அதன்மூலம் எகிப்திய மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பை இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்திடம் ஒப்படைத்துள்ளான். அதற்கு முதலில் அல்லாஹ்வுதஆலாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை சிறந்தமுறையில் நிறைவேற்ற அல்லாஹுதஆலாவைப் பிரார்திக்கின்றோம்.

மேலும், தேர்தலை சிறந்த முறையில் நடாத்தி முடித்த நீதிபதிகளுக்கும், தேர்தல் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் சிறந்த முறையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இத்தேர்தலில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற நான்கு பேர்களில் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியில் போட்டியிட்ட இருவர் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

iqwaan 3168921680993124007

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item