பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய‌ பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்தரங்கம்

"டிசம்பர் 6" பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமூக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக நேற்று மாலை பல்லாவரம் இனாயத் மஹாலில் வைத்து "பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.



ஒவ்வொரு வருடமும் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜிதின் நினைவலைகளையும் அதன் உண்மையான வரலாற்றையும், அதற்கு ஏற்பட்ட அநீதியையும் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றை தினம் காஞ்சிபுரம் மாவட்ட பல்லாவரத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். "பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை" என்கிற தலைப்பில் உரை நிகழ்த்திய பொதுச்செயலளர் அவர்கள் பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை சிறு தொகுப்பாக வழங்கினார். பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட அநீயை விவரித்து கூறினார். முஸ்லிம்களில் எவரேனும் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் விட்டு கொடுத்துவிடலாம் என்று எண்ணினால் அது தவறானதாகும், மேலும் பாபர் என்பவர் இராமர் கோயிலை இடித்துதான் மஸ்ஜிதை கட்டினார் என்ற பொய் உண்மையாகிவிடும், அதுபோல லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் தெரிவித்திருந்த 68 குற்றவாளிகளும் நிரபராதிகள் என்ற நிலை ஏற்படும் அதுமட்டுமல்லாது பாபரி மஸ்ஜித் விஷயத்தில் நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததிகள் நம்மை பழிக்கும், எனவே பாபரி மஸ்ஜித் விவாகாரத்தில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். இந்திய வரலாற்றின் நீதிக்கான போராட்டம் தோழ்வியடைந்ததாக சரித்திரம் இல்லை எனவே தொடர்ந்து போராடினால் நிச்சயமாக இறைவனின் அருளால் பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்து "இறையில்லம்" என்ற தலைப்பில் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் "மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம்" என்ற இறைவசனத்தை விளக்கி கூறினார். மஸ்ஜிதை நிர்வகிப்பவர்களுடைய தகுதிகளை பற்றி எடுத்துக்கூறினார்.  உலகத்திலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த இடம் அவனது பெயர் உச்சறிக்கப்படும் மஸ்ஜிதுகளாகும் என மஸ்ஜித் சம்பந்தமான இறைவசனங்களுக்கு விளக்கம் அளித்து, இன்று நாம் மஸ்ஜிதை கண்ணியத்துடன் பாதுகாக்க தவறிவிட்டோம். இதற்காக இறைவனிடம் கண்டிப்பாக நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறினார். மஸ்ஜிதை மீட்பதற்கான நம்மால் ஆன முயற்ச்சிகளில் ஈடுபட்டோமா என்ற கேள்வியை நிச்சயமாக இறைவன் நம்மை நோக்கி கேட்பான். வரலாறுகளில் கடுமையான போராட்டங்களுக்கு பின்னரே மஸ்ஜிதுகள் மீட்கப்பட்டுள்ளது என்று கூறி இஸ்ரேலிய படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் மஸ்ஜிதே அக்ஸாவின் வரலாற்றையும் எடுத்துக்கூறினார்.

பின்னர் பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை விவரிக்கும் " நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற வீடியோ காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. அதன் பின்னர் உரை நிகழ்த்திய காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் தலைவர் பிலால் அவர்கள் கூறும்போது சங்கப்பரிவார கூட்டங்கள் பாபரி மஸ்ஜித் இடிப்போடு நின்று விடவில்லை. அதற்கு அடுத்தப்படியாக காசியிலுள்ள மஸ்ஜிதையும், மதுராவிலுள்ள மஸ்ஜிதையும் குறிவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இனியும் முஸ்லிம் சமூகம் உறங்கிக்கொண்டிருந்தால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான மஸ்ஜிதுகளை தகர்ப்பதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள். இப்பேற்பட்ட மதவாத சக்திகளை எதிர்த்து போராட முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதர ரஃபீக் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹைதீன் குட்டி வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட‌ பாப்புலர் ஃப்ரண்டின் செயலாளர் சகோதரர் அபூபக்கர் நன்றியுரை நிகழ்த்தினார். ஆண்கள் பெண்கள் என நானூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




Chennai Popular Front

Related

இயக்கங்கள் 3824357423380349157

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item