இஸ்லாமியவாதிகளின் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி – ஷேக் யூசுஃப் அல் கர்தாவி

பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி என சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவர் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார்.

இதுக்குறித்து கத்தார் உமர் கத்தாப் மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆ உரையில் கர்தாவி கூறியதாவது: துனீசியாவிலும், எகிப்திலும் இஸ்லாமியவாதிகள் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது. இஸ்லாத்தின் அடிப்படையை பற்றிப்பிடித்துக் கொண்டு முற்போக்கு இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

கறுப்பு தினங்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய உலகம் தற்பொழுது மகிழ்ச்சியான வேளையில் உள்ளது. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாதின் காலம் கழிந்துவிட்டது. முஅம்மர் கத்தாஃபிக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஆஸாதிற்கும் காத்திருக்கிறது. சிரியாவில் மார்க்க அறிஞர்கள் அரசுக்கு சார்பான நிலைப்பாட்டை கைவிட்டு மக்களுடன் நிற்கவேண்டும். இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.

Related

muslim brotherhood 5014311808275163558

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item