மதானிக்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் குரூரமான ஒருதலை பட்சத்தை வெளிப்படுத்துகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

மதானிக்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் குரூரமான ஒருதலை பட்சத்தை வெளிப்படுத்துவதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் குற்றஞ்சாட்டியுள்ளது.

'ப்ரமோத் முத்தாலிக், நரேந்திர மோடி, பால் தாக்கரே மற்றும் ப்ரவீன் தொகாடியாவுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட நாட்டின் எல்லா குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் முஸ்லிம்களே முதற்கட்டமாக கைது செய்யப்படுகின்றனர்.

ஆனால் பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்பவங்களில் சங்பரிவார் அமைப்புகளின் செயல்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் நேர்மையான நியாயமான முழு விசாரணை நடந்திருக்கவில்லை.

இந்த சூழ்நிலைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றது.

போலீஸ் காவலில் உள்ள ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவரின் வார்த்தையை வைத்து மதானியை சிறையில் தள்ளவேண்டும் என்றே தற்போது முயற்சிகள் நடைபெறுகின்றன.

குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவாவுடனான தொடர்பை பகிரங்கப்படுத்துவதில் உள்ள குழப்பத்திலிருந்து விடுபட, கர்நாடகாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குப் பெற்ற பிஜேபி அரசு மேற்கொண்ட முஸ்லீம் வேட்டையில் சிக்கியவர் தான் மதானி." என கருத்து தெரிவித்துள்ளது.

மதானிக்கு நீதியை உறுதிசெய்யும் முயற்சிகளில் PFI ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் தலையிட்ட மனித உரிமை சேவகர்களையும் PFI பாராட்டியுள்ளது.

Koothanallur Muslims

Related

SDPI 8597676996927668656

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item