சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி: ரெயில் மறியல் போராட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/06/blog-post_07.html
சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவும், திராவிட கழகத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்தும் தடையை மீறிஇன்று காலை திராவிடகழக தலைவர் கி.வீரமணி மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப்இந்தியாவின் மாநில பொது செயலாளர் பகுருதீன் தலைமையில் தொண்டர்கள்வேப்பேரி ஈ.வி.கி.சம்பத் சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது கி.வீரமணி உள்பட 200 பேரை போலீசார் வழிமறித்து மடக்கி கைது செய்தனர்.
அவர்களில் 50 பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் இருந்த திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேதுசமுத்திர திட்டம் தமிழர்களின் நீண்டகால கனவுதிட்டம். பெரியார் அண்ணா, காமராஜர் வலியுறுத்திய திட்டம். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய போது தமிழன் கால்வாய் திட்டம் என அழைத்தார்.
அதன்பிறகு அந்த இயக்கம் திராவிடர் கழகத்துடன் இணைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ரூ.2400 கோடி மதிப்பில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிபுணர்குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 6-வது வழித்தடம் வரை வேலைகள் விரைவாக நடந்தது. வேலை முடிய இன்னும் 12 கி.மீட்டர் தான் உள்ளது. ஆனால் அதற்குள் பா.ஜனதா கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ராமர் பாலம் இடிக்கப்படுவதாக கூறி தடுத்து விட்டனர்.
அதன் பிறகு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வாழ் வாதாரம் உயரும்.
சேதுகால்வாய் அருகே இலங்கை கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருவாய் இலங்கை அரசுக்கு செல்கிறது. எனவே ராமர் பெயரை சொல்லி இந்த திட்டத்தை முடக்க கூடாது. விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் திறக்கும் நேரத்தில் மத்திய அரசு விரைவு மனு தாக்கல் செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
koothanallur muslims