சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் என் சகோதரர்களே - பேரா. அப்துல்லாஹ்

பிரபல பேச்சாளர், ஆராய்ச்சியாளர், உளவியல் கலந்தாலோசகர் பேராசிரியர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு உலகமெங்கும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பஹ்ரைனிலும் டிஸ்கவர் இஸ்லாம் தமிழ் தாஃவா பிரிவு ஏற்பாடு செய்திருந்த தாஃவா நிகழ்ச்சிக்கு 11,12-06-2010 அன்று வந்திருந்தார். பஹ்ரைன் தமுமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரை கவுரவிக்கும் விதமாக 12.06.2010 அன்று இரவு விருந்து பஹ்ரைன் புளூ மவுண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் அவருக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தமுமுக சகோதரர்கள் பேராசிரியர் அப்துல்லாஹ்விடம் கேட்ட கேள்விகளும் பதிலும் பின்வருமாறு...

கேள்வி : சமீபத்தில் நீங்கள் மீலாது விழாக்களில் கலந்து கொண்ட படங்களைப் போட்டு சிலர் இணையத்தில் விசமத்தனமான பிரச்சாரங்கள் செய்கிறார்களே?

(அப்துர் ரவூப்)

பதில் : நான் மீலாது விழாவிற்கு போனது உண்மைதான். ஆனால் ஏன் போய் கலந்து கொண்டேன் என்பதை யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள். இவ்வாறு மீலாது விழா கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்காக போனேன். இது இஸ்லாத்தில் இல்லை என்று சொல்ல போனேன். அதையே சொன்னேன். ஆனால் வெறும் படத்தை மட்டும் போட்டுவிட்டு நான் சொன்னதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் இஸ்டத்திற்கு ஏதேதோ எழுதுகிறார்கள்.

கேள்வி : நீங்கள் பெரியார்தாசனாக இருந்த போது எதிர் முனையில் சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் இருந்தனர். இப்போறு அப்துல்லாஹ் என்று ஆன பிறகும் அவர்கள் எதிர்ப்பு இன்னும் அதிகமாக இருக்குமே?
(அப்துல் காதர்)


பதில் : ஆம் நீங்கள் சொல்வது சரிதான். முன்பு நான் அவர்களை எதிரிகளாக பார்த்தேன். இப்போது அவர்களை சகோதரர்களாக பார்க்கிறேன். இஸ்லாம் எனக்கு அதைத்தான் சொல்லித் தந்திருக்கிறது. அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரு தாய் பிள்ளைகள். எனவே அவர்களும் என் சகோதரர்களே. வயலின் வாசித்தால் மழைவரும் என்று நம்பி வயலின் வசிக்க சென்ற வித்வான் குடை கொண்டு செல்லவில்லை. உண்மையில் நம்பிக்கையிருந்தால் குடை கொண்டு சென்றிருப்பார் என்று ஒரு கதை சொல்வார்கள். அதே போல் அவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் தொப்பியோடு சென்று அவர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வர நான் தயார். ஆனால் அவர்கள் பூனூலுடனும், துன்னூருடனும் அவர்கள் வர மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் வரவே மாட்டார்கள்.

கேள்வி : இனி படங்களில் நடிப்பீர்களா?

(அப்துல் முனாப்)


பதில் : கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவர்கள் கூப்பிடவும் மாட்டார்கள். அவர்கள் கூப்பிட வரதாக வகையில் பேட்டி கொடுத்தேன். என் மனைவியின் தோலில் வேரொருவன் கை போட்டு நடிப்பதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதே போல் வேரொருவன் மனைவியின் அருகில் நின்று நடிப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.

கேள்வி : பெரியார்தாசனாக இருந்த போது உங்களை பார்த்த இஸ்லாமிய சமுதாயம் இப்போது எப்படி பார்க்கிறதாக உணர்கிறீர்கள்?
(மன்னை அலி)


பதில் : உண்மையைச் சொல்லப் போனால் இஸ்லாமிய சமுதாயம் பல குழுக்கலாக பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி பார்க்கிறார்கள். இவர் நம்ம ஆளா? இவர் அவங்க ஆளா? என்று. இன்னும் சொல்லாப் போனால் என்னை திட்டுவதற்காக இரண்டு ஜமாஅத் பத்திரிகையே நடத்துகிறது. அவர் இது செய்கிறார் இது தவறு, அது தவறு என்று. நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக குர்ஆனை ஆரய்ச்சி செய்து இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றிருக்கிறேன். இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆர்வம் இருந்தால் சொல்லித் தாருங்கள் கற்றுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு புளுதி வாரி தூற்றாதீர்கள். மனம் வலிக்கிறது. அதையும் மீறி சிண்டினால் அகில உலக தவ்ஹீத் ஜமாஅத் என்று ஒன்றை இந்த பஹ்ரைனில் இருந்து ஆரம்பித்துவிடுவேன்.

கேள்வி : நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தபிறகு உங்கள் உறவினர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினரின் நிலை எப்படி இருந்தது?
(டாக்டர் ஜெஹபர் அலி)


பதில் : உறவினர்கள் எல்லோரும் கேட்பது போலவே இப்படி பன்னிட்டிங்களே என்பது போல பேசினார்கள். அவர்களிடம் இன்னும் எனது விளக்கத்தை சொல்லி வருகிறேன். குறிப்பாக மனைவிடம் உள்ளதை சொல்கிறேன். நீங்கள் மாறினால் நானும் மாறனுமா? நான் மாற மாட்டேன் என்றார்கள். நான் அவர்களிடம் சொன்னேன் மறுமை என்று ஒன்று உள்ளது அதிலும் நீங்கள் என் மனைவியாக வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்கு மேல் உங்கள் இஸ்டம் என்று சொன்னேன். உடனே கலிமா சொல்லி விட்டார்கள். மேலும் நான் இஸ்லாத்திற்கு வந்தபிறகு கோவையில் ஒரு மீட்டிங்கிற்கு சொன்றேன். அந்த மீட்டிங்கில் என்னை அடிக்க வேண்டும் வெட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் பெரும் கோபத்துடன் வந்தனர். சுமார் 2.30 மணி நேரம் நான் பேசினேன். அதே மேடையில் 20 பேர் இஸ்லாத்தை ஏற்றனர். (அல்ஹம்துலில்லாஹ்)-என்றவர் கோவை பேச்சு அடங்கிய குறுந்தகட்டினை பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ. ‍முஹைதீன் ஷா அவர்களிடம் கொடுத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ. ‍முஹைதீன் ஷா, அமைப்பாளர் முஹம்மது யூசுப், செயலாளர் ஜக்கரிய்யா, செயலாளர் டாக்டர் ‍ஜெஹபர் அலி. பொருளாளர் தமீம் அன்சாரி, தஃவா பொருப்பாளர் அப்துல் ரவூப் மற்றும் மன்னை அலி, ஆஷிக், பாருக், ஹபிப், அப்துல்காதர், சலிம், அப்துல்சமத், ஹாஜாமைதீன் நிர்வாகிகள் உள்ளிட்ட தமுமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Thanks : TMMK

koothanallur muslims

Related

TMMK 1950865424934001536

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item