தீவிரவாதத்தில் ஹிந்துக்கள்- ஆர்.எஸ்.எஸ் கவலை

‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ அதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் பொருந்தும். இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே ஆர்.எஸ்.எஸ்தான் என்பது இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிந்த விஷயம்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்தக் கும்பல்தான் இந்த பண்டார பரதேசிகள்.

கல்விக்கு கண் தந்தவர் என தமிழக மக்களால் போற்றப்படும் கர்ம வீரர் காமராஜரை டெல்லி தமிழ்நாடு ஹவுசில் வைத்து தீவைத்துக் கொழுத்த முயன்றவர்கள்.

இந்தியாவில் நடந்த 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின் சூத்திரதாரிகள்.பல்வேறு கமிஷன்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.

வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். சுதந்திர இந்தியாவில் 3 முறை தடைச் செய்யப்பட்ட ஒரு இயக்கம்.

வெறுப்பை உமிழும் முசோலினியின் பாசிசத்தை நெஞ்சாற ஏற்றும் செயலூக்கம் அளிக்கும் வல்லூறுகள். பெயர்கள் பல இருந்தாலும் அது ஸ்ரீராம சேனாவாகயிருந்தாலும்,அனுமான் சேனையாகயிருந்தாலும் எல்லா கபோதிகளும் ஆர்.எஸ்.எஸின் கருப்பையிலிருந்து கிளம்பிய விஷ விருட்சங்களே!

நிலைமை இவ்வாறிருக்க திடீரென கவலை வந்துவிட்டதாம் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு ஹிந்துக்களை தீவிரவாதத்தில் தொடர்பு படுத்துவதுக் குறித்து.

"எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்பது போலிருக்கிறது இவர்களது வாதம். கலவரங்கள் போதாது என்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் அழிவுக்கு காரணாமாகியதுடன் அந்த பழியை முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு கர்காரே வடிவில் வந்தது கேடு.

அபினவ் பாரத்,சனாதன் சன்ஸ்தான் என வெளிப்பட்ட இவர்களது முகம் ஒட்டுமொத்த வண்டவாளங்களும் வெளிவரக்கூடிய சூழலில்தான் கர்காரே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.அதில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்களுக்கு ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வடிவத்தில் மீண்டும் வந்தது வினை.

2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டின் மூலம் தேவேந்திர குப்தா என்ற ஹிந்த்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இம்முறை நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு அம்பலமானது. குப்தா ஆர்.எஸ்.எஸ் தலைமையால் ஜார்கண்டிற்கு பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டு நம்பிக்கையுடன் பல ஆண்டுகள் செயல்பட்டவன்.அத்தோடு இந்த பயங்கரவாதக் கும்பலின் தொடர்பு மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் எனத் தொடர்கிறது.

இதற்கிடையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர்கள் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ஹிந்துக்களையே கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட நினைத்து நடத்திய திட்டம் பாழாய்போய் கைது செய்யப்பட்டனர்.

மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் என்ற தீவிரவாத நங்கை கைதுச் செய்யப்பட்ட பொழுது அத்வானியும்,ராஜ்தாக்கரேயும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.

கிழட்டு அசிங்கம் பால்தாக்கரேயும் உறுமினார்.இப்பொழுது எல்லோரும் வாய்மூடியுள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம்.

இப்பொழுது இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்ததாம்.அதாவது அதன் உறுப்பினர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இயக்கம் பாதுகாப்பு வழங்காதாம்.

எய்தவனிருக்க அம்பை வைத்து என்ன பலன்?

ஹிந்து நாளிதழில் நீனாவியாஸின் செய்தியையொட்டி எழுதப்பட்டது.

www.koothanallurmuslims.com

Related

RSS 1918059159534812617

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item