ஈரான் மீதான வர்த்தக் தடை ஒரு பார்வை

இதுவரை மூன்று வர்த்தகத் தடைகளை சுமந்துவந்த ஈரானிய மக்கள், கடந்த வாரத்திலிருந்து நான்காவது தடையையும் சுமக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் இந்நான்காவது வர்த்தகத் தடையை உபயோகிக்கப்பட்ட ‘டிஸ்ஸூ’ பேப்பர் என்று வர்ணித்தாலும் சூல்நிலையை சமாளிக்க இது தக்க நடவடிக்கையல்ல! என்று பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் இக்கூட்டத்தை புறக்கணித்த லெபனான் ஒரு பக்கம் இருக்க, இந்த தடைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தையின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்று 'பெயருக்கு ஏதோ சொல்ல வேண்டுமே' என்ற அடிப்படையில் பிரான்ஸ் மற்றொரு பக்கம் சூளுரைத்தது.

யு.எஸ்., பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகள், ஈரானிற்கெதிராக இத்தடைகள் போதாது என்று கூறி ஒரு படி மேலே செல்ல, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க, சரி! இந்த தடையை நாங்கள் ஏற்கிறோம் என்று மற்ற நாடுகள் முன்மொழிய, ஐ.நா இந்நான்காவது தடையை ஈரானின் மேல் பாய்ச்சியது.

இத்தடைகள் பற்றி வல்லநர்கள் நம்புவதாவது, இது ஈரானின் அணுஆயுத முயற்சிகளை பெரிதாக ஒன்றும் செய்திடாது மாறாக பொது மக்களைத் தான் பாதிக்கும் என்று கூறியுள்ளார்கள்.

முன்பு இதுபோன்ற வர்த்தகத் தடைகள் சுமத்தப்பட்ட கியூபா, ஈராக், லிபியா போன்ற நாடுகள், இதுபோன்ற தடைகளினால் எள்ளளவும் பாதிக்காதது இவ்வுலகேதிற்கே வெளிச்சம். மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ முயற்சிகளை விட்டால் இத்தடைகள் யுக்திதான் மிச்சம்.

சரி! இந்நான்காவது தடைகளில் இடம்பெற்றது தான் என்ன?
*40 ஈரானிய நிறுவங்களுக்கு உலகளாவியத் தடை (இதில் பாதுகாப்பு, நிறுவனங்கள், வங்கிகள் என பல சேர்க்கப்பட்டுள்ளன.)

*40 ஈரானியர்களுக்கு உலகளாவியத் தடை (இதில் அணுஆயுத ஈரான் தலைவர் ஜாவித் ரஹீக்யும் சேர்க்கப்பட்டுள்ளார்.)

*யுரேனியத்தில் முதலீடு செய்வதிலிருந்து ஈரான் தடைச் செய்யப்பட்டுள்ளது.

*ஆணுஆயூத ஏவுகணைகளை தாங்கும் ஆயுதங்களை வாங்கவோ, விற்கவோ, தயாரிக்கவோ ஈரானிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

*ஹெலிகாப்டர், ஏவுகணைகள் போன்றவைகளை தாக்கும் ஆயுதங்களும் ஈரான் வாங்குவதிலிருந்து விளக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒருவரைத் தாக்கும் முன் திருடர்கள் எப்படி மிளகாய் தூள், மிளகு ஸ்ப்ரே, மயக்க மருந்து போன்றவற்றை உபயோகிப்பார்களோ, அதேபோல் தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் தன் சூழ்ச்சிகளை கையாண்டுள்ளது. இதில் போர் அறிகுறிகள் தென்படுவதாகவும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பழைய வர்தகத்தடைகளில் உலக நாடுகளின் வெற்றியை ஈரான் சவாலாக எடுத்துக் கொண்டதுதான், இன்று வளைகுடாவிலேயே அனைத்து துறைகளிலும் ஈரான் சிறந்து விளங்குவதற்கு காரணமென்றால் அது மிகையாகாது.

மற்றொரு வர்த்தகத் தடையை சுமந்துள்ள ஈரான், மீண்டும் ஒரு முறை மேற்கத்திய நாடுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.

பாலைவனதூது
koothanallur muslims

Related

muslim country 2239756709736251599

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item