மதுரையில் நடைபெற்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 'கேரியர் கைடன்ஸ்' புத்தகம் வெளியீட்டுவிழா
http://koothanallurmuslims.blogspot.com/2010/04/blog-post_9866.html
மதுரை:சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அளவில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு 'கேரியர் கைடன்ஸ்' என்ற அரிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இந்நூல் நன்கொடையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் ஒத்துழைப்புடன் ரூ.10/-க்கு குறைந்த விலையில் வெளியிடப்பட்டது.
இந்நூலின் வெளியீட்டுவிழா மதுரை க்ரவுன் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மதுரை மாவட்டத்தலைவர் A.ராஜா முஹம்மது தலைமைத் தாங்கினார். 'கேரியர் கைடன்ஸ்' புத்தகத்தை மதுரை உயர்நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வெளியிட இந்திய அரசின் சிறுபான்மை நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பவுண்டேசனின் இன்ஸ்பெக்டிங் அதாரிட்டியாக செயல்படுபவரும், முன்னாள் டி.ஐ.ஜியுமான மதிப்பிற்குரிய கெ.காஸிம் ஐ.பி.எஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். இதனைத் தொடர்ந்து கெ.காஸிம் ஐ.பி.எஸ், வழக்கறிஞர் ஷாஜகான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஷேக் ரஹ்மான் எம்.பி.ஏ மாணவர் வரவேற்றார். கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் ஆஸாத் நன்றியுரை நவின்றார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து பயன் பெற்றனர்.
www.koothanallurmuslims.com
paalaivanathoothu
www.koothanallurmuslims.com