உலகில் அதிக அளவு ஏவுகணைகளை வைத்துள்ள ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர்: அமெரிக்கா அறிவிப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2010/04/blog-post_29.html
உலகில் பல நாடுகளிடம் உள்ள ஆயுதங்களை பார்க்கிலும் அதிக ஏவுகணை, ஏறிகணைகளை ஹஸ்புல்லாஹ் அமைப்பினர் தமது வசம் வைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிரியாவும் ஈரானும் அதிக அளவிலான ஆயுதங்களை லெபனானிய இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லாஹ்விற்கு வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அனைவரையும் பாதிக்கும் என ரொபர்ட் கேட்ஸ் இஸ்ரேலிய தலைவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்துள்ளார்.ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு சிரியா ஏவுகிற ஏறிகணைகளை வழங்குவதாக ரொபர்ட் கேட்ஸ் குறிப்பிடாதபோதிலும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.
2006 ஆம் ஆண்டு ஹஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்கள் இடம்பெற்ற மோதலில் ஆயிரத்து 200 இற்கும் அதிகமான லெபனானியர்கள் பலியானதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர் இஸ்ரேலைச் சேர்ந்த 560 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரியாவும் ஈரானும் ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அதிக எறிகணைகளை வழங்குவதாகவும், அவர்களிடம் இந்த ஆயுதங்கள் அதிக அளவில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஏவூத் பராக்கை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே ரொபர்ட் கேட்ஸ் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
உலகில் பல அரசாங்கத்திடம் உள்ளவற்றை விட அதிக அளவிலான ஆயுதங்கள் ஹஸ்புல்லாஹ் அமைப்பினரிடம் இருக்கின்றனது பாரிய அச்சுறுத்தல் எனவும் எனவே அதனை மிக கவனமாக அவதானித்து வருவதாக ரொபர்ட் கேட்ஸ் பென்டகனின் செய்தியாளர்களிடம் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார்.
www.koothanallurmuslims.com