இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- பிரவீன் தொகாடியா

இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது.

இதுகுறித்து வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்.

"பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம்:தொகாடியாவுக்கு சம்மன்!
இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

paalaivanathoothu

www.koothanallurmuslims.com

Related

VHP 6929314115308203002

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item