ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர்












தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.

மேற்கு கரையும், பைத்துல் முகத்தஸும் இன்று சியோனிஷ அரசுக்கு முக்கிய பிரச்சனையாக திகழ்கிறது. இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இஸ்ரேல் நாசத்தை விளைவிக்கும் பதிலடியை ஈரானின் படைகளிடமிருந்து எதிர் கொள்ளவேண்டி வரும். லெபனானுக்கு எதிராக நடந்த 33 நாள் போரை விட கடுமையான விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கெதிரான அணுஆயுத அச்சுறுத்தல் மனித இனத்தை அழிப்பதற்கான அந்நாடுகளிலிருந்து வரும் அடையாளமாகும்.

வாஹிதி இதனை தெரிவிப்பதற்கான காரணம் என்னவெனின்ல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,ஈரான் மற்றும் வடகொரியாவுக் கெதிராக அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்தினார்.அணுஆயுதக் குறைப்பை பற்றி ஒரு பக்கம் பேசும் அமெரிக்கா டெஹ்ரான் மற்றும் பியோங்யாங் (வடகொரியா தலைநகர்)கிற்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை குறித்தும் பேசுகிறது. ஒபாமாவின் அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிட்ட ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் ஒபாமாவிற்கு அனுபவம் போதவில்லை எனத்தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமினி ஈரானின் புரட்சிப் படையினர் மற்றும் ராணுவ கமாண்டர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், அமெரிக்காவின் அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,’ஒபாமாவின் அறிக்கை ஆச்சரியமாக உள்ளது. உலகம் இதனை ஊன்று கவனிக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் அணுஆயுத தாக்குதலைக் குறித்துப் பேசும் அமெரிக்காதான் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது.’ என்றார்.

ஈரானின் தரைப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் ரசா போர்டஸ்டான் கடந்த புதன் கிழமை கூறுகையில்,’ஈரானின் தரை,கப்பல்,விமானப்படைகள் நாட்டிற்கெதிரான அச்சுறுத்தலை எதிர்க்க தயாராக உள்ளது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஆயுதப்படைகள் எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடிக் கொடுக்க எந்நேரமும் விழிப்புடனும், தயாராகவும் இருக்கின்றன’ என்றார்.


www.koothanallurmuslims.com

Related

muslim 5857805443958479367

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item