சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் தலைவரிடம் என்.ஐ.ஏ விசாரணை


பனாஜி:கோவா குண்டுவெடிப்புடன் தொடர்புடைய வழக்கில் சனாதான் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர் ஜெயந்த் அதாவலேயிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணைச் செய்தது.
இவருடைய ஆசிரமும் சோதனையிடப்பட்டது. இதனை அவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான சனாதன் ப்ரபாத் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வழக்கில் கைதுச்செய்யப்பட்ட நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் தனஞ்சய் என்பவரை அழைத்துக் கொண்டு என்.ஐ.ஏ அதாவலேயின் வீட்டிற்குச் சென்றது. சனாதன் சன்ஸ்தாவின் மேலாண்மை ட்ரஸ்டியான விரேந்திர மராத்தேயிடமும் என்.ஐ.ஏ விசாரணை மேற்க்கொண்டது.

ஆசிரமத்திலிருந்து சி.டிக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆசிரமத்தின் சர்வர், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வல்லுநர்கள் பரிசோதித்தனர்.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கோவாவில் குண்டுவெடிப்பு நடந்தது. தீபாவளியன்று கொண்டாட்டத்தின் பொழுது வெடிக்குண்டு வைத்து அதனை முஸ்லிம்களின் மீது பழிபோடவைக்கும் திட்டத்தின் அடிப்படையில் பைக்கில் வெடிக்குண்டுடன் சென்ற பொழுது குண்டுவெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் குண்டுவைத்தது சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. இச்சதித்திட்டம் மஹாராஷ்ட்ராவிலும், கர்நாடகாவிலும் தீட்டப்பட்டதால் புலனாய்வு விசாரணை என்.ஐ.ஏ யிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

RSS 4881547762907973643

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item