கூத்தாநல்லூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் விபத்து; ஒருவர் மரணம் - ஓட்டுனர் படுகாயம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/09/blog-post_7730.html
கடந்த 09.09.09 அன்று அதிகாலை கூத்தாநல்லூர் ஜமாத் ஆம்புலன்ஸ் (அல்-அமான் இளைஞர் இயக்க ஆம்புலன்ஸ்) சென்னை மருத்துவமனையில் நோயாளியை அட்மிட் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிவிட்டது. இதில் ஓட்டுனருடன் ஒத்தாசையாக சென்ற ஜனாப். முஹம்மது ஜின்னா (வயது 27 ) மரணம் அடைந்துவிட்டார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்). ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்ற இயக்க ஓட்டுனர் பலத்த காயமடைந்து சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து சிதம்பரம் கடலூர் இடையில் கொத்தடை கிராமத்தில் அதிகாலை 3.30 மணியளவில் நடந்தது. எதிரே வந்த லாரி மற்றும் கார் ஒன்று கட்டுப்பாட்டில் இல்லாது தாறுமாறாக வந்ததால், மோதுவதை தவிர்க்க நமது ஓட்டுனர் முயன்றதில் சாலையோரம் இருக்கும் புளிய மரத்தில் மோதி ஆம்புலன்ஸும் பெரும் சேதம் அடைந்தது. இயக்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஏனைய ஏற்பாடுகளை உடனிருந்து செய்தார்கள். ஜனாப். முஹம்மது ஜின்னா அவர்களின் ஜனாஸா அற்று இரவு 7:30 மணிக்கு சின்னப்பள்ளிக்கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது
விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் புகைப்படங்கள்:
நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் அறிந்து பொதுமக்களும் இயக்க உறுப்பினர்களும் பெறும் வேதனையும் வருத்தமும் அடைந்தனர். இச்சிறுவயதிலேயே சேவை மனப்பான்மை கொண்டிருந்த சகோதரர் ஜின்னாவிற்க்கு அல்லாஹ் மறுமையில் மிகச்சிறந்த பதவியை தரவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மன அமைதியை தந்தருளவும் நாம் அனைவரும் துஆச்செய்வோமாக.
விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் புகைப்படங்கள்: