முன்ததர் விடுதலையானார்:ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஆவேச உணர்வோடு


சிறையிலிருந்து விடுதலையான முன்ததர் அல் ஸைதியை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவரது சகோதரி
பாக்தாத்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு புதியதொரு எழுச்சியை ஊட்டிய ஈராக் பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸெய்தி விடுதலையானார்.

ஜெயிலில் வைத்து ஒரு மூத்த அரசு அதிகாரி தன்னை கொடூரமான முறையில் சித்திரவதைச்செய்ததாக குற்றஞ்சாட்டிய முன்ததர் இதற்காக ஈராக் அரசு மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒன்பது மாத சிறைவாசத்திற்கு பிறகே முன்ததர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். "நான் விடுதலையாகிவிட்டேன், ஆனால் என்னுடைய நாடு இன்னும் சிறைக்குள்தான் இருக்கிறது. நான் என்னை ஹீரோவாக நினைக்கவில்லை. ஆனால் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதையும், பாக்தாத் பற்றி எரிவதையும் எனது மக்கள் கொல்லப்படுவதையும் பார்த்து அவமானப்பட்டு நிற்கிறேன்". என்று ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது முன்ததர் கூறினார்.

புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்ததன் மூலம் ஹீரோவாக மாறிய முன்ததர் மீது வெளிநாட்டுதலைவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முன்ததருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது 12 மாதங்களாக குறைக்கப்பட்டது. முன்ததரின் நன்னடத்தையின் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பே விடுதலையாகியுள்ளார். அடி, சாட்டையடி, எலக்ட்ரிக் ஷாக் போன்ற சித்திரவதைகளுக்கு தான் ஆளாக்கப்பட்ட்தாக முன்ததர் கூறினார். மேலும் தண்ணீரில் தன்னை மூழ்கச்செய்தும் தான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட்தாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் நூரிமாலிக் தொலைக்காட்சி வாயிலாக எனது பாதுகாப்பு பற்றி திரும்ப திரும்ப உறுதிச்செய்துக்கொண்டிருக்கும் வேளையில் நான் சிறைக்குள் மின்சார அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். முன்ததர் கூறுகிறார். தன்னை சித்திரவதைக்கு ஆளாக்கிய அதிகாரியின் பெயரை நேரம் வரும்பொழுது வெளிப்படுத்துவதாக முன்ததர் கூறினார். தன்னை எதிரி போராளியாக கணிக்கும் அமெரிக்க ரகசிய புலனாய்வுக்குழு என்னுடைய உயிரை பறிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பாழாக்காது என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் முன்ததர். புஷ்ஷை நோக்கி தான் ஷூவை எறிந்த்தற்கு காரணம் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதுதான் என்ற முன்ததர், "நான் அமெரிக்க மக்களை நோக்கி கேட்கிறேன்.ஒருவேளை ஈராக் அமெரிக்காவை ஆக்கிரமித்து அங்குள்ள 10 லட்சம் மக்களை கொலைச்செய்து 5 லட்சம் மக்களை நாட்டைவிட்டும் இடம்பெயர்ந்து, அமெரிக்கா அழிவிற்கும் நாசத்திற்கும் ஆளாக்கப்பட்டால் உங்களுடைய எதிர் செயல் எவ்வாறிருக்கும்". என்று கேள்வி எழுப்பினார் முன்ததர்.

முன்ததர் விடுதலையானதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த முன்ததர் குடும்பத்தினர் அவரை நடனமாடியும், பாட்டுப்பாடியும் வரவேற்றனர். பணம், வேலை, திருமணம் செய்ய பெண் என ஏராளமான பரிசுக்குவியல்களை அரபு உலகம் முன்ததர் அல் ஸெய்திக்கு வாக்களித்துள்ளது.

செய்தி:தேஜஸ்

Related

MUSLIMS 1959113903725666096

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item