என்னை எவரும் மதமாற்றவில்லை, மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் – ஸில்ஜா ராஜ்

கடந்த சில வாரங்களாக கேரள பத்திரிகைகளில் விவாத்ததைகிளப்பிய செய்தி என்னவெனில் சிலர் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யும் பணியை மேற்க்கொள்வதாகவும் அவர்கள் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.

ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா பாசிச அமைப்பும் முஸ்லிம்கள் லவ்ஜிஹாதை துவக்கியுள்ளதாக பிரச்சாரம்செய்தது.

பத்திரிகைகளின் இந்த சூடான செய்திகளுக்கும் ஹிந்து ஐக்கியவேதியின் லவ் ஜிஹாதிற்கும் காரணமானவராக கருதப்படும் ஸில்ஜா ராஜ் என்பவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சத்தியம் என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்.

ஸில்ஜா ராஜ் கர்நாடகா மாநிலத்தில் சாமராஜ் நகர் சதி ரோடில் அமைந்துள்ள பங்கஜ் என்ற பேக்கரி உரிமையாளரான செல்வராஜின் மகள். இவர் கண்ணூரில் சிற்றாரிக்கடையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வந்தபொழுது டாக்ஸி ட்ரைவரான அஸ்கருடன் காதல் ஏற்படுகிறது. சிவில் என்ஞ்சினியரிங் மாணவியான ஸில்ஜா டிப்ளமோ முடித்தவுடன் கம்ப்யூட்டர் படிக்கும் காலக்கட்டத்தில் அஸ்கரை திருமணம் முடிக்க முடிவெடுக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி பெற்றோரை அறிவிக்காமல் அஸ்கரை சந்திக்க அவர் வேலைபார்க்கும் கோட்டயம் அருகிலிருக்கும் ஈராட்டுப்பேட்டை என்ற ஊருக்கு வந்துள்ளார். வரும் வழியில் தனது தாயாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸில்ஜாவின் உறவினர்கள் ஈராட்டுப்பேட்டைக்கு வந்து அஸ்கர் தன்னை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளனர். இவர் மறுக்கவே வழக்கறிஞருடன் வந்து அஸ்கரை திருமணம் முடிக்கும் முடிவை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கும் ஸில்ஜா அசைந்துக்கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து இச்செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிகை வியாபாரிகளும் ஹிந்து ஐக்கியவேதியும் விவாதத்தை கிளப்பி விட்டன. இதுபற்றி பேட்டியளித்த ஸில்ஜா கூறுகையில், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் எந்தவித வற்புறுத்தலும் நிர்பந்தமும் இல்லை. மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டேன். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சரியாக விசாரிக்காமல் தேவையற்ற சர்ச்சைகளுக்கு என்னையும் என்னுடைய கணவரையும் உள்ளாக்கிய ஹிந்து ஐக்கியவேதி மீது சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்துவருகிறேன். எனக்கு ஒன்றரை வருடமாக அஸ்கரை தெரியும். அவருக்கு எந்தவொரு தீவிரவாத செயலுக்கும் சம்பந்தமில்லை. நான் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அல்ல. ஈராட்டுப்பேட்டைக்கு வந்தபிறகே நான் இஸ்லாத்தை பற்றி படிக்கவேண்டும் என்று அஸ்கரிடம் கூறினேன்.பின்னர் அஸ்கர் என்னை வாரிசேரி என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் என்னை சேர்த்தார். மேஜரான எனக்கு எந்த மதத்தின் அடிப்படையில் வாழ்வதற்கும் விரும்பும் நபரை திருமணம் முடிப்பதற்கும் சுதந்திரமுண்டு. இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஹிந்து ஐக்கியவேதி எனக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item