அண்ணா பிறந்தநாள்-கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை
http://koothanallurmuslims.blogspot.com/2009/09/9.html
சென்னை: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிறைவு தினத்தையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேல்சிறைகளில் இருக்கும் 9 கைதிகளை தமிழக அரசு இன்றுவிடுதலைசெய்தது.
இந்த 9 பேரும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிசிறையில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் அனுமதியின்றி குண்டுகள், ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு 13 ஆண்டுகள்சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் 9 பேர் இன்று காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளனர். மற்ற ஒருவர் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறை யில் இருப்பார். இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்ச்சியையொட்டி 1,405 கைதிகளை அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.