தென்காசி டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தல்
http://koothanallurmuslims.blogspot.com/2009/03/blog-post_22.html
தென்காசியில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
நெல்லை மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் மஹ்பூப் அன்சாரி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
மத துவேச செயல்களில் ஈடுபடும் தென்காசி டி.எஸ்.பி., மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகரையில் அப்பாவி முஸ்லிம்கள் 9 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக காவல்நிலையத்தில் வைத்து ஜமாத்தார்கள், பொதுமக்கள் மத்தியில் அப்பாவி முஸ்லிம்களை மததுவேசத்துடன் பேசி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் இதில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட முஸ்லிம்களை குறிவைத்து வீண்பழி சுமத்துவதையும், அவர்களுக்கு பாஸ்போர்ட் தரமாட்டோம் என காவல்துறையினர் மிரட்டுவதையும் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.