முஸ்லிம்கள் இனி காங்கிரசை நம்பிப் பயனில்லை

கொள்ளைக்கார வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகி ஒருதாய் மக்கள் போல் வாழ்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இன உணர்வுககு ஆளாகியதன் பலனாக நமது தாய்த்திரு நாடு இரண்டாகி பின்னர் மூன்று துண்டுகளாகியது. 1947-ல் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தானாக உருவெடுத்தது. அன்று பாகிஸ்தான் முஸ்லிம்களுக்குரிய நாடு என்றானபோது எஞ்சியுள்ள நாடு இந்துக்குளுக்குரிய நாடு என உருவெடுக்க வேண்டும் என்பதே இந்துத்துவா காவி மனம் படைத்தவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் இந்துத்துவாவினர் இலைமறை காயாகத்தான் இருந்தனர்.

காந்தி, நேரு போன்ற நலநிலை உள்ளங்கொண்டோர்களின் ஆளுமை காங்கிரஸில் மிகைத்திருந்ததால் இந்திய நாடு மதச் சார்பற்ற நாடாக முகிழ்ந்தது. இந்துத்துவாவினரின் ஆதிக்கம் காங்கிரஸில் அப்போது செல்லுபடியாகவில்லை. ஆம்! நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி போன்றோர் இந்தியத் திருநாட்டின் பிரதமர்களாக இருந்த காலகட்டங்களில் இந்துத்துவாவினரின் சதித்திட்டங்கள் பெரும் அளவில் நிறைவேறவில்லை. ஆனால் 1949-ல் நேரு பிரதமராக இருந்த காலத்தில் பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டது. சிலையை அகற்ற நேரு இட்ட கட்டளையை அன்றைய மாநில முதல்வர் நிறைவேற்றவில்லை. ஆயினும் நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோர் பிரதமர்களாக இருக்கும் வரை மதசார்பற்ற நிலையும், இந்துத்துவாவிற்கு இடங்கொடா நிலையும் நீடித்து வந்தது.

இந்துத்துவாவினர் தங்களின் காவிக் கொள்கையை வளர்த்தெடுக்க பாபர் மசூதி வாய்ப்பளிப்பதாக அமைந்துவிட்டது. இன உணர்வு மிகைத்த முஸ்லிம்களும் அவர்களின் சதித்திட்டத்திற்குப் பலியாகி காவியின் வளர்ச்சிக்குத் துணை நின்றனர். அதனால் காவியினர் உ.பி. மாநில அரசைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்று 1992 டிசம்பர் 6-ல் காவி எண்ணங் கொண்ட நரசிம்மராவ நடுவண் அரசில் பிரதமராக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். அது மேலும் இந்து முஸ்லிம் பிளவை அதிகப் படுத்தியது. முஸ்லிம்களும் இன வெறிக்கு ஆளாகி இறைவனின் கட்டளைகள் 3:186, 41:34 இவற்றைப் புறக்கணித்துச் செயல்பட்டு, இந்துத்துவாவினர் வளர துணை புரிந்தனர். அதன் விளைவு காவியின் நடுவண் அரசையும் கைப்பற்றி, அரசின் முக்கிய பதவிகளில் (Keyposts) காவி மனங்கொண்டோர் அமர பாதை அமைத்துக் கொடுத்தனர்.

இப்படிப் படிப்படியாக இந்துத்துவாவினர் வளர்ந்து காங்கிரஸ் கட்சியினுள்ளும் அவர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் மும்பைத் தாக்குதல்களிலும், கர்மவீரன் ஹேமந் கார்கரே, மற்றும் அவரது சகாக்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் இந்துத்துவாவினரின் கை இருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில், அமெரிக்கா கொடுத்த ஆதாரங்கள் என்ற பெயரில் நடுவண் அரசு தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வீட்டினுள்ளேயே திருடனை வைத்துக் கொண்டு ஊர் முழுக்கத் திருடனைத் தேடுவதாக நாடகம் ஆடுகிறது. இது தீவிரவாதமும், பயங்கரவாதமும் மேலும் மேலும் வளர வழி வகுக்குமே அல்லாது அவை ஒழிய வழி வகுக்காது.

உலகிலேயே நம்பர் 1 பயங்கரவாதி புஷ்ஷும் அமெரிக்காவும் என்பதை பல அறிஞர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். 1948-ல் பாலஸ்தீன மக்களிடமிருந்து பலாத்காரமாக அமெரிக்காவிலும், பிரிட்டனாலும் பிடுங்கிக் கொடுக்கப்பட்ட பகுதிதான் இஸ்ரேல் அதுவரை யூதர்களுக்கென்று சொந்த நாடு என்று ஒன்று இருக்கவில்லை என்பது உலகமறிந்த உண்மை. ஆனால் இன்றோ இஸ்ரேல் அமெரிக்காவின் கள்ளப் பிள்ளையாக செல்லப் பிள்ளையாக இருந்து வருகிறது.

அந்த இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக பாலஸ்தீனியர்கள் வாழும் காஸா பகுதிகளில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பச்சிளம் குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள் என பல ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. குண்டு மழை பொழிவதை நிறுத்துமாறு ஐ.நா.சபையும் உலகின் பல நாடுகளும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் இஸ்ரேல் அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துவதாக இல்லை.

இஸ்ரேல் உலகின் பல நாடுகளையும் ஐ.நா.சபையையும் துச்சமாக மதித்து நடக்கக் காரணம் என்ன? அமெரிக்கா கொடுக்கும் துணிச்சல்தானே! ஐ.நா.சபையில் கடுமையான சட்டம் நிறைவேற்றி இஸ்ரேலை அடக்க முற்படும் போது அமெரிக்கா தனது “வீட்டோ” அதிகாரத்தால் தடுத்தால் அதன் பொருள் என்ன? இப்போதும், இதற்கு முன்னரும் பல்லாயிரம் பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டு ரசிக்கும் பஷ்ஷைவிட அமெரிக்காவை விட பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் உலகில் வேறு எங்கும் இருக்க முடியுமா?

இந்தியா அணிசாரா நாடாக இருக்கும் போது, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் கொடுதது இந்தியா அமெரக்காவின் அடிமை நாடாக ஆகிவிட்டதாலும், அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் அரங்கேற்றி வரம் கொடுஞ்செயல்களுக்கு பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பைத் தராததாலும், இந்தியாவைக் கொண்டு பாக்கிஸ்தானை மிரட்டி வருகிறது அமெரிக்கா.

அப்படிப்பட்ட அமெரிக்கா மும்பை பயங்கரத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதை ஏற்று நடுவண் அரசு செயல்பட்டால் அதன் பொருள் என்ன? அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு நடுவண் அரசும் துணைபோகிறது என்று யாரும் சொன்னால் அதை நம்மால் மறுக்க முடியுமா?

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானிம் ஈராககிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனரே! அப்போர்களை ஆரம்பிக்க புஷ் கூறிய காரணங்கள் அப்பட்டமான பொய்கள் என இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டனவே! புலனாய்வுத்துறையினர் கொடுத்தத் தவறான தகவல்களை நம்பிச் செயல்பட்டுவிட்டேன் என்று இன்று புஷ் கூறுகிறாரே! அந்நாடுகளுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான பொருள் நட்டத்தையும், லட்சக்கணக்கான உயிர் நட்டத்தையும் புஷ்ஷால் திரும்பித் தரமுடியுமா?

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதும் புஷ்ஷின் சதியே என்று நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இன்று அம்பலப்படுத்தி வருகிறார்கள். விமானத்தின் மூலம் அதிலிருந்த எரி பொருளைக் கொண்டு கட்டிடத்தை ஒருபோதும் தரைமட்டமாக்கி இருக்கமுடியாது. அந்த அளவு கடினமான உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கமுடியாது. பழைய கட்டிடங்களைத் தரைமட்டமாக்கும் பயங்கர குண்டுகள் கொண்டு மட்டுமே அந்த வலுவான கட்டிடத்தை தரைமட்டமாக்கி இருக்க முடியும் என்று பல ஆய்வாளர்கள் புஷ்ஷின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

ஆம்! இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றிவிட்டு அப்பழியை பின்லேடன்மீது சுமத்தி அதைக் காரணம் காட்டி எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள் மீது போர் தொடுத்து, அவற்றில் பொம்மை அரசுகளை ஏற்படுத்தி எண்ணெய் வளங்களை தன் கைவசப்படுத்திக் கொள்ளை அடிக்கலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். அந்த திட்ட அடிப்படையிலேயே ஆஃப்கானிஸ்தான், ஈராக் தாக்குதல்கள், இப்போது அமெரிக்காவின் கழுகுப் பார்வை ஈரானின் பக்கம் திரும்பி இருக்கிறது.

இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் கொண்ட நம்பர் 1 பயங்கரவாதி புஷ்ஷையும், அமெரிக்காவையும் நம்பி அமெரிக்கா கொடுக்கும் பொய்த் தகவல்களை உண்மைத் தகவல்களாக நம்பி நடுவண் அரசு செயல்பட்டால், அதன் பொருள் என்ன? அமெரிக்காவின் இரகசிய ஏஜண்டுகளான இந்துத்துவாவினரின் ஆதிக்கம் நடுவண் அரசில் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை என்று யாரும் சொன்னால் அதை நம்மால் மறுக்க முடியுமா?

எய்தவன் இருக்க அம்பை நோவது போல், மும்பை பயங்கரத்தின் சூத்திரதாரிகளை விட்டு விட்டு, பாக்கிஸ்தானில் பதுங்கிச் செயல்படும் அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகளைக்காட்டி பக்கத்து நாடான பாகிஸ்தானை மிரட்டி வருவது அறிவுடைமையான செயலா?

அமெரிக்காவின் கைப்பாவையாக நடுவண் அரசு செயல்பட்டால், அது காவிக் கட்சியினருக்குத் துணை போனதாகவே இருக்கும். அதன் விளைவு. நூற்றாண்டுகளுக்கு மேல் புகழ் பெற்ற பல ஒப்பற்றத் தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி கரைந்து நேற்று முறைத்த பா.ஜ.க.வில் ஐக்கியமாகும் நிலையே ஏற்படும்.

முஸ்லிம்கள் இனி காங்கிரசை நம்பிப் பயனில்லை. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யும் என இனி எதிர்பாக்க முடியாது. முஸ்லிம்கள் இப்போது கண்டிப்பாகச் செய்ய வேண்டியது வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை அன்று பாகிஸ்தான் பிரிவினைக்காக ஒன்றுபட்டிருந்ததை விட மிக வீரியமாக இன்று ஓரணியில் ஒன்றுபட்டு ஒரே தலைமையில் செயல்பட முன்வருவதேயாகும். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சுயநலம். அற்ப உலக ஆதாயங்கள், நீயா, நானா என்ற அகம்பாவத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல்-நெறி நூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து 3:102,103 கட்டளைப்படி முற்றிலுமாக இஸ்லாத்தில் நுழைந்து, குர்ஆனின் போதனைப்படி நடக்க முன்வந்தால் மட்டுமே இந்த பேராபத்திலிருந்து தப்ப முடியும். இல்லையென்றால் ஸ்பெயினை 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லாமல் துடைத்தெறியப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. முஸ்லிம்களே உஷார்! எதிர்கால உங்களது சந்ததிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தும் பரிதாப நிலைக்கு அளாகாதீர்கள். எதார்த்த் நிலையை உணர்ந்து உங்களது நிலையை மாற்றிக் கொள்ள முன்வாருங்கள்.

நீங்கள் நம்பி இருக்கும் அரசியல் தலைவர்களையும், மதகுருமார்களாக மதத் தலைவர்களை நம்பி ஏமாறாதீர்கள். மோசம் போகாதீர்கள். இவர்கள் அனைவரையும் விட மேலாக மிக விளக்கமாக, இரவும் பகலைப் போல் தெள்ளத் தெளிவாக மார்க்கத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் உலக மக்கள் அனைவருக்கும் விளக்கி இருக்கிறான். மேலும் தனது தூதரைக் கொண்டு மிகத்தெளிவாக நடைமுறைப்படுத்திக் காட்டச் செய்திருக்கிறான். அதற்கு மேலும் விளக்கம் தருவதாக இந்த மவ்லவிகள் வாதிட்டால் அவர்கள் அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரைவிட ஆற்றல் மிக்கவர்கள் என அகம்பாவத்துடன், ஆணவத்துடன் அபூ ஜஹீல் வாதத்தை வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து, அவர்களின் வலையில் சிக்காமல் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை நேரடியாகத் தன்னம்பிக்கையுடன் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடக்க முஸ்லிம்கள் முன்வந்தால் மட்டுமே முஸ்லிம்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து நடப்பார்களாக.

thanks to :அபூ அப்தில்லாஹ்

Related

MUSLIMS 6227126149223196205

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item