சிங்கப்பூர்-'சென்ட்' திருடிய இந்திய விமானிக்கு அபராதம்!
http://koothanallurmuslims.blogspot.com/2009/03/blog-post_07.html
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பிரபல முஸ்தபா சென்டர் வணிக மையத்தில் உள்ள கடையில் நான்கு சென்ட் பாட்டில்களைத் திருடியதாக இந்தியாவைச் சேர்ந்த விமானிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இந்தியாவைச் சேர்ந்தவர் புனீத் அலக் (36). ஏர் இந்தியாவில் விமானியாக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் சிங்கப்பூர் வந்த அவர் செவ்வாய்க்கிழமை, சையத் அல்வி சாலையில் உள்ள முஸ்தபா சென்டருக்கு வந்தார்.அங்குள்ள ஒரு கடைக்குள் சென்ற அவர், முஸ்தபா கடையின் கூடையோடு பர்ச்சேசிங்கில் ஈடுபட்டார். அப்போது யாருக்கும் தெரியாமல், எஸ்டீ லாடர் பர்ப்யூம், கால்வின் க்லீன் பர்ப்யூம் உள்ளிட்ட நான்கு சென்ட் பாட்டில்களை எடுத்து தனது ஜீன்ஸ் பான்ட்டுக்குள் மறைத்து வைத்தார்.பின்னர் வெளியே வந்த அவர் மீது கடைக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்படவே தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது நான்கு பாட்டில்களையும் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அவர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். மாஜிஸ்திரேட்டிடம் தான் ஏர் இந்தியா பைலட் என்றும், தனது செயலுக்கு வருந்துவதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார் அலக்.இதையடுத்து அவருக்கு 800 டாலர் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கமாக இதுபோன்ற குற்றங்களுக்கு அங்கு 3 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்திய விமானி தனது தவறையும், குற்றத்தையும் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டதால் அபராதத்துடன் தப்பியுள்ளார்.
விமானம் ஏறிப்போய் இந்தியர்களின் மானத்தை கப்பலேற்றிருக்கிறார்.
ReplyDelete