டெல்லியில் பர்மா தூதரகம் நோக்கி SDPI பேரணி


பர்மாவில் புத்த பாசிஸ்டுகளால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை நிறுத்தக்கோரி பர்மா தூதரகம் நோக்கி SDPI கட்சியின் சார்பில் நேற்று(5.04.2013) மாபெரும் பேரணி  மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த பேரணியின் போது பர்மாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை நிரந்தரமாக தடுக்க இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு  SDPI கட்சியின் டெல்லி மாநில பொது செயலாளர் முஹம்மது ஜாபிர் தலைமை தாங்கினார்.இதில் கலந்து கொண்டு பேசிய SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஹபீஸ் மன்சூர் அலி கான்        கடந்த ஆண்டு முதல் மியான்மரில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்பு வாத இனப்படுகொலை புத்த பாசிஸ்டுகளால்  நடந்து வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் தங்களது வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கின்றனர். பள்ளிவாசல்களும்  தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.இதனால் முஸ்லிம்கள் பெரும் அச்ச உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இந்திய அரசாங்கம் உடனே தலையிட்டு. நாளுக்கு நாள் வளர்ந்து வரும்  புத்த  பாசிஸ்டுகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும்,முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்த்திடவும் அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரவும்  இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.       இதில் SDPI கட்சியின் செயல் வீரர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் மியான்மர் தூதரகம் நோக்கி பேரணியாக செல்லும் போது டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Related

முக்கியமானவை 7897052978251927639

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item